இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Vastu Online classes

ஆன்லைன் பயிற்சி வகுப்பு... எனது குருமார்களிடம் நான் பயின்ற அடிப்படை விஷயங்களும் மற்றும் அறிவியல் ரீதியாக ஒவ்வொரு தனிநபருக்கும் வாஸ்து மிகத் துல்லியமாக வேலை செய்வதையும் என்னுடைய 13 வருடத்தில் வாஸ்துவில் நான் அனுபவித்த பலன்களை இந்த உலகத்தில் தேடல் நிறைந்த நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக வாஸ்து அறிவியலை ஆன்லைன் வாயிலாக சொல்லிக் கொடுக்க உள்ளேன். இது ஏதோ கரும்பலகையில் எழுதி வைத்து கதை சொல்வதல்ல வாஸ்து... எம்முடைய ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ளக்கூடிய ஒவ்வொரு நபரும் அதை எளிதாக புரிந்துகொண்டு உணர்வு பூர்வமாக உணரும் விதமாக உருவாக்கியுள்ளேன் நான் வாஸ்து அறிவியலை கற்றுக்கொண்ட பிறகு நான் மட்டும் என்னுடைய குடும்பம் மட்டும் அதனுடைய பயனை அடைந்து சந்தோசமாக வாழ்ந்து காலத்தை முடித்துக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ... இந்த உலகத்தில் வாஸ்து என்கிற பெயரில் நிறைய நபர்கள் உங்களை அனுதினமும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதை அறிந்து என் மனம் வேதனை அடைந்து ..இந்த அறிவியலை குறைந்தது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நபர்களுக்காகவாது இதை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கத...
படம்
  கோரமான விபத்தை ஏற்படுத்திய ஒரு சிறு தவறு...   கட்டிடத்தின் அமைப்பு.. கொங்கு மண்டலத்துக்கு உரித்தான வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பில் கட்டடம்.. வடக்கு, கிழக்கு, வடக்கிழக்கு எல்லை வரை கலர்   தகரத்தால் (Roofing sheet) அடைபட்ட அமைப்பு.. வடமேற்கு வடக்கு தெரு பார்வை.. கொங்கு மண்டலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு நாம் அடிக்கடி செல்வது உண்டு.. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் வாஸ்து பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் மிக அருகில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு எல்லை வரை மூடிய அமைப்பில் கலர் ரூஃபிங் அமைப்பு உருவாகுவதை   என்னிடம் சுட்டிக் காண்பித்தது அந்த வீட்டு உரிமையாளர்... பதிலுக்கு உங்கள் வீட்டிற்கு என்னை வாஸ்து பார்க்க அழைத்தீர்கள். உங்கள் வீட்டிற்கு உண்டான பலனை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். பக்கத்து வீட்டிற்கு உண்டான பலன்களை சொல்ல இயலாது என்று பதில் கூறிவிட்டு பக்கத்து வீட்டிற்கு உண்டான பலன் எதுவும் கூறாமல் வந்துவிட்டேன்.. இருந்தபோதிலும் என்னுடைய மனம் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லியது இது போன்ற அமைப்புகள் ஒர...
படம்
  வடகிழக்கு சமையலறை என்ன செய்யும்...   பஞ்சபூதங்களில் மிகவும் முக்கியமான ஒன்று அக்னி பூதம் இதை சரியாக கையாளாத பட்சத்தில் அவர் தன்னுடைய கோபத்தை அந்த வீட்டில் உள்ள நபர்கள் மீது நேரடியாக 100% தாக்கத்தை ஏற்படுத்தி பஸ்பமாக்கி விடுகிறார்..   சமையலறை அமைக்க சரியான இடம்... தென்கிழக்கு, தெற்கு இந்தப் பகுதி மிக மிக சரியான இடம்.. வடமேற்கு, மேற்கு இந்தப்பகுதியும் சரியான இடம்.   சமையல் அறை அமைக்கக்கூடாது இடங்கள்.. தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் பிரம்மஸ்தானம்...   பலன்கள்.. குடும்பத் தலைவர் மற்றும் ஆண்கள் வீட்டில் இருப்பது மிகமிக வாய்ப்பு குறைவு.. (அதாவது வெளிநாடு சென்று விடுவது வெளியூர் சென்று விடுவது அல்லது மனைவியை விட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பது அல்லது நிரந்தரமாகவே பிரிந்திருப்பது) ஆண்கள் உடலளவிலும் மனதளவிலும் செயலற்று முடங்கி இருக்க நேரிடும் குடும்ப உறவுகளில் எந்நேரமும் கலவரம் ஆகவே இருப்பது... ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறிய சூழலில் பெண்கள் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு தவறான வழியில் திசை திரும்பி தன்னுடைய வாழ்க்...
படம்
  கழிவறை குளியலறை அமைப்புகளும் அதன் நன்மை தீமைகளும்...   வீடு மற்றும் அலுவலகங்களில் கழிவறை எங்கு வரவேண்டும் எது சரியான அமைப்பு எது தவறான அமைப்பு... அப்படி வரும்போது இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை பற்றி இந்த கட்டுரையில் முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்....   சரியான அமைப்பு... வீட்டின் உட்பகுதியில் தெற்கு, மேற்கு, வட மேற்கு மற்றும் தென் கிழக்கு.. வீட்டின் வெளிப்பகுதியில்,தென்கிழக்கு, வடமேற்கு..   தவறான அமைப்பு.. வீட்டின் உட்பகுதியில், தென்மேற்கு, பிரம்மஸ்தானம், வடகிழக்கு, வடக்கு மற்றும் கிழக்கு.. இதன் வெளிப்பகுதியில், வடக்கிழக்கு, வடக்கு, கிழக்கு மற்றும் தென்மேற்கு..   தவறான அமைப்பின் பலன்கள்... குடும்பத் தலைவர் அல்லது வீட்டின் முதல் வாரிசு ஆண் மற்றும் மூத்த வாரிசு பெண் என்றால் பெண்ணின் கணவர் இவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். உடல் ரீதியாக, மன ரீதியாக, தொழில் ரீதியாக அனைத்திலும் பாதிப்பு நேரடியாக ஏற்படுத்தும்... திருமணத்தடை, குழந்தையின்மை, சரியான வேலை இல்லாமல் இருப்பது போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தும்... விபத்துக்கள் மற்றும் உடல்ரீதியா...
படம்
  புதிய கட்டிடம் கட்டும் பொழுது விபத்து ஏற்பட காரணம் என்ன...   கட்டிட அமைப்புகள்... 1.    வடக்கு, கிழக்கு, வடகிழக்கு முற்றிலும் மூடி அமைப்பு. 2.    வடகிழக்கில் மிகப்பெரிய போர்ட்டிகோ மற்றும் பிரமிடு போன்ற போர்ட்டிகோ அமைப்பு. 3.    வடகிழக்கில் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் மாடிப்படி அமைப்பு வருவது. 4.    வடகிழக்கில் வெட்டுப்பட்ட அமைப்பு. வடமேற்கு, தென்கிழக்கு வளர்ச்சி. 5.    வடகிழக்கு பூஜை வருவது. 6.    வடகிழக்கில் குளியலறை, கழிவறை வருவது. 7.    வடகிழக்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் குடோன் மற்றும் கடைகளை கட்டி வாடகைக்கு விடுவது. 8.    வடகிழக்கு சமையலறை. 9.    வடக்கு, கிழக்கு, வடகிழக்கு ஒழுங்கற்ற கட்டிட அமைப்பு. 10. தென்மேற்கு மிகப்பெரிய பள்ளம். 11. தெருக்குத்தின் பலன் அறியாமல் கட்டுவது. 12. கிணறு உள்ள இடத்தை மூடி அதன் மேல் வீடு கட்டுவது. 13. Lift போன்ற இயந்திரங்களை வடகிழக்கில் வைத்து உபயோகப்படுத்துவது.   நான் மேலே குறிப்பிட்ட இதுபோன்ற தவறுகள் ஒரு...

நீங்கள் புது வீடு கட்டும் நபரா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...

படம்

குழந்தை பாக்கியம் பெற....

படம்
                                         குழந்தை பாக்கியம் தடை ஏன்.... குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கும், குழந்தை பாக்கியம் தள்ளிப் போவதற்கும் காரணமான வாஸ்து தவறுகள் என்னென்ன என்று இந்த கட்டுரை முழுவதும் நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.... குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதவர்... இது ஆன்றோர் வாக்கு... ஒரு குடும்பத்தில் திருமணம் ஆன இளம் தம்பதியருக்கு திருமணமான சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தள்ளி போகும் பட்சத்தில் அந்தப் பெண்ணிற்கு இந்த சமுதாயம் கொடுக்கும் பட்டமே வேறு... இதை உலகம் அறிந்ததே... குழந்தை பாக்கியத்திற்காக அந்த காலங்களில் அரச மரத்தைச் சுற்றிய காலங்கள் உண்டு ஆனால் இன்று அடுக்குமாடி மருத்துவமனைகளை சுற்றம் கூடிய அவல நிலைகளை பார்க்க முடிகிறது.. மருத்துவத்திற்கு பல லட்சங்கள் செலவு செய்தாலும் சில பேருக்குத்தான் அந்த குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.... இன்னும் சில பேர் பல முயற்சிகள் எடுத்தும் பல...