கோரமான விபத்தை ஏற்படுத்திய ஒரு சிறு தவறு...

 

கட்டிடத்தின் அமைப்பு..

கொங்கு மண்டலத்துக்கு உரித்தான வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பில் கட்டடம்..

வடக்கு, கிழக்கு, வடக்கிழக்கு எல்லை வரை கலர்  தகரத்தால் (Roofing sheet) அடைபட்ட அமைப்பு..

வடமேற்கு வடக்கு தெரு பார்வை..

கொங்கு மண்டலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு நாம் அடிக்கடி செல்வது உண்டு..

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் வாஸ்து பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் மிக அருகில் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு எல்லை வரை மூடிய அமைப்பில் கலர் ரூஃபிங் அமைப்பு உருவாகுவதை  என்னிடம் சுட்டிக் காண்பித்தது அந்த வீட்டு உரிமையாளர்...

பதிலுக்கு உங்கள் வீட்டிற்கு என்னை வாஸ்து பார்க்க அழைத்தீர்கள். உங்கள் வீட்டிற்கு உண்டான பலனை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள். பக்கத்து வீட்டிற்கு உண்டான பலன்களை சொல்ல இயலாது என்று பதில் கூறிவிட்டு பக்கத்து வீட்டிற்கு உண்டான பலன் எதுவும் கூறாமல் வந்துவிட்டேன்..

இருந்தபோதிலும் என்னுடைய மனம் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லியது இது போன்ற அமைப்புகள் ஒருபொழுதும் நல்ல விளைவை ஏற்படுத்தாது, இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்கிறது போல் தோன்றுகிறது.. என்கிற நினைவிலேயே அந்த இடத்தை மறந்தும் கடந்தும் வந்து விட்டோன்...

இரண்டு வருடம் ஆகிவிட்டது...

நேற்று அந்த நெருங்கிய நண்பர் நம்மை தொடர்பு கொண்டு ( இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை ஞாபகப்படுத்தினார் )

துக்கமான செய்தியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்..

அது என்னவென்றால் அந்த வீட்டிலுள்ளவர்கள் மூவரும் காரில் செல்லும் பொழுது எதிரில் வந்த லாரியில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி 3 பேரும் இறந்து விட்டதாக அந்த செய்தி...

 

குறிப்பு..

இந்த கட்டுரையை நான் பதிவிடுவதற்கு காரணம் நான் ஆதாயம் தேடிக் கொள்வதற்காக அல்ல...

வீடு என்று இருந்தால் நான்கு பக்கம் காற்றோட்டம் இருக்க வேண்டும்.

மழை பெய்தால் மலைச்சாரல் வீட்டிற்குள் வர வேண்டும்.

வெயில் நேரத்தில் வெயில் வீட்டிற்குள் வர வேண்டும்..

முக்கியமான சாலை ஓரத்தில் குடியிருந்தால் வீட்டிற்குள் தூசி குப்பைகள் கண்டிப்பாக வரும்... வரவேண்டும்..

இயற்கையை இயற்கையாக  அனுமதிக்காமல், தூசி, காற்று,  குப்பை, மழை, வெயில் இவைகளை   வீட்டிற்குள் நுழைய  விடாத மாதிரியான கட்டடங்களை உருவாக்கும் பொழுது விளைவுகள் மிக மோசமாக இருக்கிறது அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு...

நன்றி ...

PM Krishna Rajan
Vastu Engineer
8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits