விதி வலியதா?
·
10 செண்ட் இடம்
அளவுள்ள காலி மனை
·
மொத்த இடத்திற்கு
வடகிழக்கு கட்டப்பட்ட கட்டிடம்
·
மொத்த இடத்தில்
தென்மேற்கில் சிறிய வீடு
·
ஆரம்பத்தில் சிமெண்ட்
னவப்பதற்காக போடப்பட்ட ரூம்.
·
இந்த அமைப்பு அந்த
ஊரில் உள்ள ஒவ்வொரு வீடு கட்டும்போது அமைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
·
பொதுவாக வீட்டின்
உட்பகுதியில் வாஸ்து குறைகள் எதுவும் தென்படவில்லை.
·
வெளிப்பகுதியில்
தெற்கு, மேற்கு அதிக காலி இடம் விட்டு விட்டு கட்டப்பட்ட கட்டிடம்
·
வீட்டில் வடக்கு
நடுப்பகுதியில் கழிவு நீர் தொட்டி அமைப்பு மட்டுமே தவறு.
சரி நண்பர்களே நான் மேற்கூறிய
அமைப்புகள் மட்டுமே அங்கு தவறாக தென்பட்டது.
தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட
பகுதியில்தான் இதுபோல நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதாவது, புது வீடு கட்டத் துவங்கும்
முன்பு தென்மேற்கில் சிறிய ரூம் போடுவதும், வடக்கு எல்லையில் வீடு கட்டுவதும், வடக்கில்
கழிவுநீர் தொட்டி போடுவயதும் மனையடி பார்த்து கட்டுவதுமே இந்த ஊரில் வாஸ்து என்று கருதி
அந்த ஊரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலோசகரின் வழிகாட்டுதல் இப்படி இருந்து வருகிறது.
சரி நண்பர்களே விஷயத்துக்கு வருவோம்…
நாம் வாஸ்து பார்க்க சென்ற
வீட்டின் அமைப்புகள் தான் இங்கு குறிப்பிட்டது.
விளைவுகள்
வீடுகட்டி குடியேறிய சில வருடங்களில்
வீட்டின் உரிமையாளருக்கு கேன்சர் கண்டறியப்பட்டது.
வீடுகட்டி இரண்டு வருடம் ஆகிறது
தற்சமயம் வறுமையின் பிடியில் உள்ளார்கள்,
நண்பர்களே தெற்கு மேற்கு காலியிடம்
அதிகம் ஆனால் அந்த வீடு கடனில் மூழ்கும் என்பதும்,
தென்மேற்கில் சிறிய வீடு என்பதும்,
கணவன் மனைவியை
பிரிக்கும் தன்மை கொண்டது என்பதும்,
வடக்கு கழிவுநீர் தொட்டி கேன்சர்
வர வைத்தே தீரும் என்பதும் புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லையோ?
நான் அந்த ஊரில் ஒரு வீட்டிற்கு
மட்டுமே வாஸ்து பார்த்து சரி செய்ய ஆலோசனை கொடுக்கப்பட்டது. என்னால் அந்த ஊரில் உள்ள
அத்தனை வீடுகளையும் சரிசெய்ய முடியாது. இங்கு நான் யாரை குறை கூறுவது விதியையா? அல்லது
அங்கு உள்ள வாஸ்து ஆலோசகரயா? அல்லது எதுவும் அறியாத பொதுமக்களையா?
வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு
வினைக்கும் எதிர்வினை உண்டு…..
நன்றி… வணக்கம்
மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு
Download ....
https://play.google.com/store/apps/details?id=co.tarly.yccdf
PM. Krishnarajan
8220544911
கருத்துகள்