தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

நாங்கள் இருவரும் ஒன்றாக பிறந்த அண்ணன் தம்பிகள் , கூட்டுக்குடும்பமாக இன்றுவரை ஒரே இடத்தில் ஒரே காம்பவுண்டில் ஆளுக்கு ஒரு வீட்டை கட்டி வாழ்ந்து வருகிறோம்..
எதோ தெரியவில்லை என்னுடைய அண்ணனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை,
மருத்துவ செலவு நிறையசெய்து கொண்டு உள்ளார் ஒருமுறை எங்களுடைய வீட்டை பார்த்து தவறை கூறுங்கள் சரி செய்து கொள்கிறோம் என்று என்னை அழைத்து ஆலோசனை கேட்ட ஒரு கட்டிடத்தின் அமைப்பு தான் இது....


கட்டிட அமைப்பு;

1 தெற்கு திசை பார்த்த மொத்த வீட்டு அமைப்பு.
2 வடக்கு பகுதியை விட தெற்கு பகுதியில் கூடுதலாக காலியிடம்.
3 மேற்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு கிழக்குப் பகுதியில் பொது சுவர்.
4 இரண்டு வீட்டிற்கும் சேர்த்தார் போல் தென்மேற்கு மூடிய ஏணிப்படி அமைப்பு.
5 இரண்டு வீட்டிற்கும் தென்மேற்கு  கழிவறை.
6 மேற்கு பகுதி வீட்டிற்கு உண்டான கழிவுநீர் தொட்டி அந்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது, அது கிழக்குப் பகுதி வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
7 இரண்டு வீட்டிற்கும் வடமேற்குப் பகுதியில் சமையலறை.
8 கிழக்கு பகுதியில் தம்பியும் மேற்குப்பகுதியில் அண்ணனும் வசிக்கிறார்கள்...

வாஸ்து தவறுகள்;...

அண்ணன் தம்பி  இருவரும் ஒரே இடத்தில் இதுபோல் கட்டிடங்கள் கட்டுவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளார்கள் .
இது அவர்களுடைய ஒற்றுமைக்கு அடையாளமாக தோன்றினாலும் இதற்கு பின்பு உள்ள வாஸ்து தவறால்  ஏற்படும் விளைவுகள் அவர்களுக்கு தெரிவதில்லை.
பொதுவாக இது போல் அண்ணன் தம்பிகள் சேர்ந்து கட்டக்கூடிய வீட்டில் கிழக்கு பகுதி யாருக்கு சொந்தமாக  அமைகிறதோ அந்த பகுதியில் உள்ளவர் இயல்பாகவே ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடிகிறது.
மேற்கு பகுதி யாருக்கு அமைகிறதோ அவருடைய வாழ்க்கை அன்றுமுதல் அதாவது அந்த வீட்டில் குடியேறிய நாள் முதல் அவருடைய வாழ்க்கை முற்றிலும் முடக்கத்தில் சென்று விடுகிறது...
காரணம் மேற்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு கிழக்கு பகுதி முற்றிலும் மூடப்பட்டதே.

நம்முடைய நாட்டில் அன்று முதல் இன்று வரை தம்பிக்கு கீழ்ப்பகுதியும் அண்ணனுக்கு மேல் பகுதியும் என்கிற நடைமுறையால் வந்த விளைவுகள் தான் இது....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits