தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்
South facing house benefits

வணக்கம் நண்பர்களே நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு அழைப்பின்பேரில் வாஸ்து பார்க்க சென்றிருந்தோம் அந்த வீட்டின் (போட்டோ) புகைப்படம் இங்கு நன்பதிவிட்டுள்ளேன்.

வீட்டின் அமைப்புகள்;
1 செவ்வகமான கட்டமைப்பு.
2 தென்கிழக்கு வரவேற்பறை.
3 தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம்.
4 வடமேற்கு சமையலறை.
5 வடகிழக்கு பூஜை அறை.
6 மேற்கு பகுதியில் கழிவறைகள்.
7 வடக்குப் பகுதியை காட்டிலும் தெற்கு கூடுதலான காலியிடம்.
8 தென்மேற்கு மாடிப்படி.

நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமைப்புகள் பொதுவாக அங்கு காணப்பட்டது.

வாஸ்து பார்க்க அழைத்ததின் காரணம்;

வீடு கட்டிக் கொண்டு இருக்கும்போதே அந்த வீட்டு எஜமானி உடல் நலக்குறைவால் இருக்கு எய்திவிட்டார்
வீடு கட்டத் துவங்கி மூன்று வருடம் ஆகிறது இன்னும் அந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை.
ஒருபுறம் பணப்பிரச்சனை இருந்தாலும் மறுபுறம் குடும்ப உறவுகளில் ஏகப்பட்ட சலசலப்புகள் நிகழ்கிறது.

கட்டிட உரிமையாளரின் கேள்வி???

எனக்கு தெரிந்த வாஸ்து பார்க்க கூடிய நபரை அழைத்து தான் இந்த வீட்டிற்கு வரைபடம் தயாரித்து கட்டிடம் கட்டினோம், ???

 எங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் நிகழ்கிறது??

 எங்களுடைய கட்டிடத்தில் ஏதேனும் தவறுகள் உள்ளதா ???

எங்களுக்கு  நேரம் சரியில்லையா ?? 

 எங்களுக்கு யாராவது பில்லி, சூனியம் செய்வினை போன்ற ஏதாவது விஷயங்கள் செய்துவிட்டார்களா??

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றார்...
ஐயா சற்று நேரம் பொறுங்கள்: உங்களுடைய வீட்டை முழுவதும் ஆய்வு செய்து விட்டு பிறகு பலன் தருகிறேன்.. என்று கூறிவிட்டு கிட்டத்தட்ட அரைமணிநேரம் அந்த வீட்டிற்கு ஆய்வு மேற்கொண்டோம்.

ரிசல்ட்;...

வீட்டில் உள்ள அமைப்பில் பூஜை அறையைத் தவிர வேறு எதுவும் பெரிய தவறுகள் எதுவும் இல்லை.

வெளிப்பகுதியில் வடக்கு புதிய கட்டிடம் தெற்குப் பகுதியில் கூடுதலான காலியிடம்..

இதுதான் மிகப் பெரிய தவறு போல் இந்த இடத்தில் பொதுவாக தென்படுகிறது..

ஆனால்....
தோற்றத்தில் தெற்கு திசை பார்த்த வீடு போல் தோன்றினாலும் உண்மையில் அந்த இடம் தெற்கு திசையில் இல்லை,   அந்த வீட்டின்  நுழைவாயில் சரியாக 100% தென்மேற்கு திசையில் அமைந்திருக்கிறது

முடிவு...

வாஸ்து சாஸ்திரத்தில் தென்மேற்குப் பகுதியில் வாசல் வைத்தால் அல்லது திறந்த அமைப்புகளை ஏற்படுத்தினால் என்ன முடிவு ஏற்படும் என்று அனைத்து அன்பர்களுக்கும் தெரிந்தது தான் இங்கு நான் இதை விளக்கத் தேவையில்லை...
                  ‌‌                நன்றி
                             PM Krishna Rajan
                              Vastu Engineer
                              8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.