சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கு வாசல் சிறப்பு தானா?
5 சென்ட் இடத்தில் கட்டப்பட்ட அழகான கட்டிடம்
4 சம பாகத்தில் வடகிழக்கு முழுவதும் கார் பார்க்கிங்
வீட்டிற்கு நான்குபுறமும் 2 அடி இடைவெளி மட்டுமே-
இவர்கள் வீட்டில் இருந்து தென்மேற்கில் 30-40 அடி தொலைவில் மிகப் பெரிய கிணறு
வீட்டின் உட்பகுதியில் Hallயில் Highceiling
தெற்கு நடுப்பகுதியில் தரைத்தளத்தில் வெட்டப்பட்ட அமைப்பு
முதல் தளத்தில் கிழக்கு வெட்டுப்பட்ட இடத்தில் சூரிய ஒளி ஊடுருவது போன்ற அமைப்பு
தரைத்தளத்தில் கிழக்கு நடுப்பகுதியில் அழகான விநாயகர் சிலை 2-3 அடி உயரத்தில் (தினமும் தவறாமல் 5 வேலை பூஜை செய்கிறோம்)
வாஸ்து தோஷத்தை சரி செய்ய ஏற்கனவே செய்யப்பட்ட பல பரிகாரங்கள்.
தொழிற்சாலை அமைப்பு
தெற்கு பகுதியில் ஏற்கனவே நடத்தி வந்த ஆபிஸ் அகற்றி தென்மேற்கில் போடப்பட்டுள்ளது.
தென்மேற்கில் இருந்த எடை அதிகமான Machineயை எடுத்து வடகிழக்கில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு பகுதியை சரியாக மூன்று பாகங்களாக பிரித்து தென்மேற்கில் மேற்கு வாசல் வைக்கப்பட்டுள்ளது.
ஜோதிடம் பாக்க வந்தவர் தனக்கு வாஸ்து தெரியும் என்று கூறி இந்த வாசலையும், அலுவலகத்தையும் வைக்க ஆலோசனை கொடுத்து சென்றுவிட்டார்.
உச்சகட்ட பிரச்சனை :
சார் நான் கடந்த 23 வருடங்களாக இந்த தொழில் செய்து வருகிறோம். ஆனால் பத்து வருடமாக நிறைய பிரச்சனைகள், அதிலும் கடந்த 2 வருடமாக அந்த தொழிற்சாலையை திறக்கவே முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கழுத்தை பிடிக்கிறார்கள். என்ன நேரமோ தெரியவில்லை சார் என்று புலம்பிய நபரின் வீட்டின் அமைப்புகள்தான் மேலே படித்தது.
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போன இடத்தில் அங்க ஒரு கொடுமை தலைவிரித்து ஆடியதாம். அதேபோல்தான் தனக்கு ஏதோ நேரம் சரியாக இருக்கிறதா? இல்லையா? என்று ஜோசியம் பார்த்தால் அங்கு தான் புது பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது.
ஜோதியிடர் வடிவில் வந்து அந்த கிரகம் மொத்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட ஆலோசனை கொடுத்துள்ளது. அதாவது காசு கொடுத்து சூனியத்தை வாங்கிவிட்டார். மூட வேண்டியதை திறக்கச் சொல்வதும் திறக்க வேண்டியதை மூடச் சொல்வதும், எடை குறைவாக வைக்க வேண்டிய இடத்தில் எடையை அதிகப்படுத்தும், எடை அதிகம் வைக்க வேண்டிய இடத்தில் காலியாக வைத்துக் கொள்ள சொல்வதும், சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல 27 நட்சத்திரத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் ஒரே மாதிரி தான் வேலை செய்யும். வாஸ்துவில் தவறு ஏற்பட்டால் அந்த இடத்தில் உள்ளவர் மீது 100% தாக்கத்தை அது நடத்தியே தீரும்.
ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு
தகவல்கள்
PM KrishnaRajan
8220544911
மேலும் இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை படிக்க....
https://play.google.com/store/apps/details?id=co.tarly.yccdf
கருத்துகள்