திடீர் மரணத்தை கொடுத்த வாஸ்து அமைப்பு

 வணக்கம்.. இந்த அற்புதக் கலையை எனக்கு கற்றுக் கொடுத்த ஆத்மகுருவுக்கு நன்றி..

நடுத்தர வயதுள்ள ஒருவர் ஓய்வின்றி உழைத்து வருகிறார். ஒரு நாள் மஞ்சள் காமாலை என்று கூறி மருத்துவமனையில் சேருகிறார், 5 அல்லது 6 நாள் கழித்து இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக சென்று விடுகிறார்.

ஆம் நண்பர்களே இந்த நிகழ்வுக்குக் காரணமான வீட்டின் அமைப்பை பார்ப்போம்….

1. தெற்கு திசை மனை கிழக்கு பார்த்து கட்டப்பட்ட கட்டிட அமைப்பு...

திசை மாறி உள்ள இடம் என்பதால் தெற்கு திசை தென் மேற்காக மாறிவிட்டது....

2. வடக்கு பகுதியில் மாடிப்படி,

3. வடக்கு பகுதியில் பகுதியில் கழிவறையில் கழிவுநீர் தொட்டி,

4. வடக்கு வடகிழக்கு எல்லை வரை முழுவதும் மூடிய கலர் ரூஃபிங் போட்ட அமைப்பு...

5. வடகிழக்கு கிழக்கு இரண்டு தலை வாசல் வைத்தவர்கள் ஜன்னல் வைக்க மறந்துவிட்டார்கள்,

6. ஒழுங்கற்ற மனை அமைப்பு தென்மேற்கு கூடுதலான வளர்ச்சி,

7. மேல் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு தனிப்பட்ட கேட்டை தென்மேற்கில் வளர்ந்த பகுதியில் முக்கிய கேட் வைத்து, மேற்குப் பகுதியில் இரும்பினால் மாடிப்படி அமைத்துக் கொடுத்து உள்ளார்கள்..

8. வீட்டின் உட்பகுதியில் தென்மேற்கு பகுதியில் உள்ள அறையில் A/C இல்லை என்பதற்காக வடமேற்கு அறையை மாஸ்டர் பெட்ரூம் ஆக நீண்டகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்...

9. தென்மேற்கு அறையில் பூஜை அறையாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்

10. வீட்டின் வடகிழக்கு வெளிப்பகுதியில் முல்லைக்கொ,டி வெற்றிலைக்கொடி முதல் மாடியை கடந்து நிற்கிறது...

11. தோற்றத்தில் வாஸ்துப்படி கட்டப்பட்ட கட்டிடம் போல் தோன்றினாலும் திசை மாறி உள்ளது என்பதால் உள்ள அமைப்புகள் அனைத்தும் மாறி அமைந்துள்ளது...

குறிப்பு :

நண்பர்களே திசையை கண்டறியாமல் வரைபடம் கொடுப்பதும் அல்லது வீட்டை கட்டிக் கொடுப்பதும் அந்த வீட்டில் உள்ளவர்களை கடுமையான பாதிக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

நன்றி....

 

பஞ்சபூதத்தின் அருளால் எல்லோரும் நல்வாழ்க்கை வாழ எனது அன்பான வாழ்த்துக்கள்…

Vastu Engineer PM KrishnaRajan

8220544911

மேலும்... https://vastuengineer.in/log_in.php?c...

Web : www.vastuengineer.in | www.krishnarajan.com Playlist : https://www.youtube.com/c/VASTUENGINE...

E-Mail : pmkrishnarajan@gmail.com

Phn : 82205 44911 | 9445355155

Books : Amazon Kindle https://www.amazon.in/s?k=krishnaraja...

Google Play Books https://play.google.com/store/books/d...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits