திசை மாறி உள்ள ஒரு இடத்தில் - சிறு தவறு பெரிய விளைவுகள்
வணக்கம் நண்பர்களே…
நான் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீட்டிற்கு அழைப்பின் பேரில் வாஸ்து பார்க்க சென்றிருந்தோம்.
அந்த வீட்டின் (Photo) புகைப்படம் இங்கு பதிவிட்டுள்ளேன்.
வீட்டின் அமைப்புகள் :
·
செவ்வகமான
கட்டிடமைப்பு.
·
தென்கிழக்கு
வரவேற்பறை.
·
தென்மேற்கு
மாஸ்டர் பெட்ரூம்.
·
வடமேற்கு
சமையலறை.
·
வடகிழக்கு
பூஜை அறை.
·
மேற்கு
பகுதியில் கழிவறைகள்.
·
வடக்குப்
பகுதியை காட்டிலும் தெற்கு கூடுதலான காலியிடம்.
·
தென்மேற்கு
மாடிப்படி.
· தெற்கு திசை வீடு அமைப்பு
நான் மேலே குறிப்பிட்டுள்ள
இந்த அமைப்புகள் பொதுவாக அங்கு காணப்பட்டது.
வாஸ்து பார்க்க அழைத்ததின் காரணம்…
வீடு கட்டிக் கொண்டு
இருக்கும்போதே அந்த வீட்டு எஜமானி உடல் நலக்குறைவால் இயற்கை எய்திவிட்டார்..
வீடு கட்டத் துவங்கி
மூன்று வருடம் ஆகிறது இன்னும் அந்த கட்டிடத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை.
ஒருபுறம் பணப்பிரச்சனை
இருந்தாலும் மறுபுறம் குடும்ப உறவுகளில் ஏகப்பட்ட சலசலப்புகள் நிகழ்கிறது.
கட்டிட உரிமையாளரின் கேள்வி???
எனக்கு தெரிந்த வாஸ்து
பார்க்க கூடிய நபரை அழைத்து தான் இந்த வீட்டிற்கு வரைபடம் தயாரித்து கட்டிடம் கட்டினோம்,
???
எங்களுடைய கட்டிடத்தில்
ஏதேனும் தவறுகள் உள்ளதா ???
எங்களுக்கு நேரம் சரியில்லையா ??
எங்களுக்கு யாராவது
பில்லி, சூனியம், செய்வினை போன்ற ஏதாவது விஷயங்கள் செய்துவிட்டார்களா??
எங்களுக்கு மட்டும்
ஏன் இவ்வளவு கஷ்டங்கள் நிகழ்கிறது??
இப்படி கேள்விகளை
அடுக்கிக் கொண்டே சென்றார்...
என்னுடைய பதில்....
ஐயா சற்று நேரம்
பொறுங்கள்… உங்களுடைய வீட்டை முழுவதும் ஆய்வு செய்து விட்டு பிறகு பலன் தருகிறேன்..
என்று கூறிவிட்டு கிட்டத்தட்ட அரைமணிநேரம் அந்த வீட்டிற்கு ஆய்வு மேற்கொண்டோன்...
வீட்டில் உள் அமைப்பில்
பூஜை அறையைத் தவிர வேறு எதுவும் பெரிய தவறு இல்லை.
மொத்த இடத்தில் வீடு
அமைந்துள்ள இடம்... வடக்குப்பகுதி குறைவான காலி இடமும், தெற்கு பகுதியில் வடக்கு பகுதியை
காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலான காலி இடம் விட்டு வீடு அமைக்கப்பட்டுள்ளது...
ரிசல்ட்....
தோற்றத்தில் தெற்கு
திசை பார்த்த வீடு போல் தோன்றினாலும் உண்மையில் அந்த இடம் தெற்கு திசையில் இல்லை, அந்த வீட்டின்
நுழைவாயில் சரியாக 100% தென்மேற்கு திசையில் அமைந்திருக்கிறது...
முடிவு...
வாஸ்து சாஸ்திரத்தில் தென்மேற்குப் பகுதியில் வாசல் வைத்தால் அல்லது திறந்த அமைப்புகளை ஏற்படுத்தினால் என்ன முடிவு ஏற்படும் என்று அனைத்து அன்பர்களுக்கும் தெரிந்தது தான் இங்கு நான் இதை விளக்கத் தேவையில்லை...
பூமியில் எட்டு திசைகள்
உண்டு..
வடக்கு, வடகிழக்கு,
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு,
இந்த திசைகளை துல்லியமாகக்
கண்டறிய கருவிகள் உண்டு.. கருவிகள் துணையில்லாமல்
ஒரு வீட்டிற்கு வரைபடம் தயாரித்துக் கொடுக்கும்போது மோசமான விளைவுகளையே அந்த வீட்டின்
உரிமையாளர் சந்திக்க வேண்டி நேரிடுகிறது...
நன்றி
Vastu Engineer - PM
Krishna Rajan.
8220544911, 9445355155..
கருத்துகள்