அவசர உலகில் சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா.?

நீரிழிவு நோய்க்கும் குக்கர் சாதம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்படி சாதத்தை வடிப்பதில் தொடங்கி சாப்பிடுவது வரை பல விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அவசர உலகில் உணவை சாப்பிடக்கூட அவசரம்தான். சமைப்பதில் கூட குறுக்குவழியா என்றால் அதற்கு குக்கர்களின் விசில் சத்தம்தான் சாட்சி. அப்படி குக்கரின் சமைத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய தீமைகளை பெறக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்பு போட்டு சூடாகப் பருகினால் பித்தம் அகலும். சூட்டால் கண் எரிச்சல் இருந்தாலும் சரியாகும். அதுவே ஆறிப்போன கஞ்சியை குடித்தீர்கள் எனில் வாயுத்தொல்லையால் அவதிப்படுவீர்கள்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பு நீங்கும். 

சிலருக்கு சாதம் சூடாக சாப்பிட்டால் பிடிக்கும். அதற்க்காக கொதிக்க கொதிக்க இருக்கும் சாதத்தை சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டில்தான் சாப்பிட வேண்டும். அதேபோல் சில்லென ஆறிப்போன சாதத்தை சாப்பிடுவதால் கீழ்வாதம், மூட்டுவாதம் போன்ற பிரச்னைகளை சந்திக்கக்கூடும். 

வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் சாப்பிடும்போது பிரியாணி கூட தோற்றுப்போகும். உழைக்கும் வர்கத்தினருக்கு களைப்பு தெரியாமல் நீண்ட நேரம் வேலை செய்யவும் பழையது உதவும். குறிப்பாக வெயில் காலத்தில் குள்ர்ச்சி தரும். இது சுவையில் மட்டுமல்லாது வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டுவலி, தோல் நோய்களுக்கும் மருந்தாகும். 

சாதம் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போது பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகமே எடுக்காது. பித்தம் இருந்தாலும் நீங்கும். அதுவே பச்சரிசி சாதமாக இருப்பின் வாதம், பித்தம் இரண்டுமே நீங்கும். 

நம் முழுமையான விருந்து உணவில் கண்டிப்பாக மோரும் இருக்க என்ன காரணம் தெரியுமா..? சாதத்தில் மோர் ஊற்றி சாப்பிடுவது செரிமானத்தை தூண்டும். எனவேதான் சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு என ஒரு புடி புடித்தாலும் அவற்றை செரிமானிக்க இறுதியாக மோர் சாப்பிடாமல் எழுந்துவிடாதீர்கள். 

வாழையில் மிதமான சூட்டில் இருக்கும் சாதத்தை போட்டு சாப்பிடும்போது அதிலிருக்கும் துவர்ப்பு சுவை பல நன்மைகளை சேர்க்கும். 

மாதவிடாய் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு சிவப்பு அரிசி சாதம் நல்லது. வயிற்று பொருமலுக்கு சம்பா அரிசி நல்லது. 

Online Vastu Course.... (Video வடிவில்)

https://vastuengineer.in/log_in.php?cond=register

Web : www.vastuengineer.in

Phn : 82205 44911 | 78688 55577


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits