VRS (விருப்ப ஓய்வு) வாங்கிய வீட்டு அமைப்பு....
VRS (விருப்ப ஓய்வு) வாங்கிய வீட்டு அமைப்பு....
என்னுடைய தந்தை ஒரு அரசு பணியாளர் இரண்டு வருடங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு எடுத்து வீட்டில் இருக்கிறார்.எனக்கும் இன்று வறை சரியான வேலை அமையவில்லை எங்களுடைய வீட்டில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்...
என்று வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க அழைத்த ஒரு வீட்டின் அனுபவம்...
வாடிக்கையாளரின் விவரங்கள்:...
இவர் மத்திய அரசு ஊழியர்,
இவர்களுடைய பணியில் அடிக்கடி இடம் மாறுதல் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
கடைசியாக இடம் மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் அரசு குடியிருப்பு இல்லை என்பதால் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி இருக்கிறார்...
வாடகை வீட்டிற்கு வந்த இரண்டாவது மாதத்தில் விருப்ப ஓய்வுக்கு மனு செய்திருக்கிறார்....
இவருக்கு இரண்டு மகன்கள் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார் மற்றொருவர் தாய் தந்தை அருகில் இருந்து கொண்டே வேலை தேடுகிறார் அவருக்கு இன்றுவரை வேலை கிடைக்கவில்லை....
வீட்டின் அமைப்பு....
தெற்கு பார்த்த தலைவாசல்... தவறு
தென்மேற்கு வரவேற்பறை.... தவறு
தென்கிழக்கு சமையலறை....சரி
வடகிழக்கு கணவன் மனைவிக்கான ஓய்வு அறை... தவறு
வடமேற்கு கூடுதலான ஒரு அறை....சரி
வடமேற்கு வடக்கு பகுதியில் பின்பக்க வாசல்... தவறு
வடக்கு பகுதியில் குளியலறை கழிவறை.... தவறு
தெற்குப் பகுதியை விட வடக்குப் பகுதியில் குறைவான காலியிடம்.... தவறு
தெற்கு பகுதியில் கழிவுநீர் தொட்டி.... தவறு
தெற்குப் பகுதியில் ஒரு சிறிய கேட்.....சரி
தென்மேற்குப் பகுதியில் கார் நுழைவதற்கு என்று பெரிய கேட்.... தவறு
மேற்கூரிய அனைத்தும் அந்த வீட்டின் அமைப்புகள்..
வடகிழக்கு மூடப்பட்டு தென்மேற்கு திறந்த அமைப்பாக இருக்கும் பொழுது ஆண்கள் வேலைக்குப் போவதை விரும்புவதில்லை....
தெற்கு பகுதியை விட வடக்குப்பகுதி குறைவான காலி இடம் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களின் வருமானத்தை படிப்படியாக குறைத்து கொண்டேவந்து காலப்போக்கில் கடனாளியாக மாற்றும்.. அந்த வீடு...
தீர்வு....
சொந்த வீடு என்றால் இடித்து உடைத்து மாற்ற வேண்டும். ஆனால்
வாடகை வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஒரு அதிர்ஷ்டம்... என்னவென்றால் ஊரில் உள்ள வீடுகளில் எது நமக்கு நல்ல வீடாக அமைகிறதோ அந்த வீட்டில் குடியேறி விடலாம்...
நன்றி..
Vastu Engineer
PM Krishna Rajan
8220544911..
கருத்துகள்