Forward message.... படித்ததில் பிடித்தது....

#பணம்_மட்டுமே_போதுமா...?


உலகில் உள்ள பலரது எண்ணங்களும் பணம் சார்ந்ததாக மட்டுமே உள்ளது. பணம் பணம் பணம் பணம் பணம் என்பதை நோக்கியே பலரது எண்ணங்களும் உள்ளது. 


பணத்தை ஈர்க்க நினைப்பது தவறா? என்று கேட்டால் அது நிச்சயமாக இல்லை. ஏனென்றால் நாம் வாழ்வது பணத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட, பொருளாதார கொள்கைகள் உள்ள உலகத்தில் வாழ்கிறோம் எனவே பணத்தை ஈர்க்க நினைப்பதில் எந்தவொரு தவறும் இல்லை. 
ஆனால் பணத்தை மட்டுமே நீங்கள் ஈர்க்க நினைப்பதால், அது உங்கள் வாழ்க்கையில் பணம் மட்டுமே பிரதானமான மனநிலையை உருவாக்கிவிடும். நிம்மதி, அன்பு, கருணை, நம்பிக்கை உணர்வு, நன்றியுணர்வு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், உறவுகள் என பலவற்றையும் நீங்கள் ஈர்க்க முடியாமலேயே போய்விடும்.  
இவை அனைத்தும் சேர்ந்தது தானே அபரிமிதமான வாழ்க்கையாக இருக்க முடியும்? 

இவை அனைத்தும் சேர்ந்தது தானே அற்புதமான, அழகான வாழ்க்கையாக இருக்க முடியும்? 

பணத்தை மட்டுமே குறிக்கோளாக எண்ணுவதால், மற்ற எதையும் சிந்திக்காத மனநிலை நமக்கு உருவாகிறது. மற்ற எதையுமே சிந்திக்காத நமது மனநிலையால் நாம் பணத்தையும் ஈர்க்க முடியாமல், இருப்பதையும் இழந்துவிட்டு தவிக்கிறோம். 

உடலில் ஆரோக்கியம் இல்லை, உறவுகளில் சுமூகமான உறவு இல்லை, எதையும் சமாளிக்கும் மனதைரியம் இல்லை. சரியாக முடிவெடுக்கும் மனப்பக்குவம் இல்லை. இப்படி அனைத்தையும் இழந்து தவித்து வருகிறோம். 

அப்படி என்றால் இதற்கு என்னதான் தீர்வு? 
உங்களை நீங்கள் அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் யார் என்பதை உணர முயற்சி செய்யுங்கள். 

உங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் எனில் உங்கள் வாழ்க்கையை அபரிமிதமாக மாற்றிவிடும் சக்தி உங்களுக்கு கிடைத்துவிடும். 

உங்களிடம்‌தான் அனைத்து சக்திகளும் அடங்கியுள்ளது. உங்களால் மட்டுமே உங்கள் சக்தியை வெளிப்படுத்த முடியும். நீங்கள் உணராமல் எந்தவொரு மாற்றமும் உங்கள் வாழ்க்கையில் நடக்காது. 
நீங்கள் யார்? 
ஏன் பிறந்துள்ளீர்கள்? 
என்கிற கேள்விகளை உங்களிடம் நீங்களே கேளுங்கள்.
உங்களுக்குள் ஊடுறுவிச்சென்று நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள். 

இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுத்துள்ள பொக்கிசம் எனில் அது நீங்கள் தான். தன்னையறிய தனக்கோர் கேடில்லை. 

உங்களை நீங்களே உணரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சியை உங்களால் உணர முடியும்.

படித்ததில் பிடித்தது.....

நன்றி..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits