காதல் திருமணத்திற்கு காரணம் வாஸ்து தவறா???

 

கடந்த இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் என்பது நமது சமுதாயத்தில் மிகப்பெரிய குற்றமாக கருதினார்கள். ஆனால், இன்றைக்கு நவீன மாற்றத்தால் பெரிய குற்றமாக எவரும் கண்டுகொள்வதில்லை...

காதல் திருமணம் செய்தவர்களை நமது சமுதாயத்தில் இப்படியெல்லாம் கூறுவது உண்டு.

அவர்களின் பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை,

அவர்களின் கூட சேர்ந்த நண்பர்கள் சரியில்லை,

அவர்கள் படித்த கல்லூரி சரியில்லை,

அவருடைய வயசுக்கோளாறு, அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டார்கள் .

இதுபோல பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நமது சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பேசுவார்கள், ஆனால் என்னை பொருத்தவரை ஒருவர் காதல் திருமணம் செய்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணம் மட்டுமே சொல்லுவேன் ...

ஒன்று...

அவர்களின் முன்னோர்களான தாத்தா, பாட்டன், அம்மா, அப்பா, அக்கா, தங்கை இவர்கள் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் இரண்டு திருமணம் போன்ற விஷயங்களை செய்திருந்தாலும் அந்த வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அதேபோல் குணம் கண்டிப்பாக ஏற்படும்...

இரண்டு...

வாஸ்து தவறுகள்.

கிழக்கு பகுதி முழுவதும் மூடிய அமைப்பு.

வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பு.

வடமேற்கு வடக்கு வாசல்.

தென்கிழக்கு கிழக்கு வாசல்.

தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூம் இல்லாமல் வேறு வேறு தேவைக்கே அந்த இடத்தை பயன்படுத்துவது.

தென்மேற்கு தெருப்பார்வை தெருக்குத்து

தென்மேற்கு பூஜை அறை

தென்மேற்கு மூலை படி அமைப்பு

தென்மேற்கில் நீர்நிலைகள்..

இதுபோல இன்னும் குறிப்பிடும்படியான பல அமைப்புகள் உண்டு இது போன்ற வீடுகளில் வசிப்பவர்களின் மனநிலையில் காதல் திருமணத்திற்கான எண்ணம் தூண்டப்பட்டு திருமணத்தில் சென்று முடிகிறது.

சில நேரங்களில் திருமணம் ஆனவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு குடும்பத்தில் பல குழப்பத்தை விளைவிக்கிறது இந்த வாஸ்து தவறான கட்டிடங்கள்..

வீட்டில் மூத்தவர்கள் இருக்கும்பொழுது இளையவர்கள் திருமணம் செய்து கொள்வதும் இதுபோல தவறான வாஸ்து அமைப்பே..

நன்றி

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits