பழமையான கட்டிடங்களை வாங்கலாமா??

 

இன்றைக்கு உள்ள பொருளாதார நிலைமையில் எல்லோராலும் சொந்த வீடு கட்டிக் கொள்ள முடிவதில்லை. இருந்தபோதிலும் எல்லோருக்குமே சொந்த வீடு வேண்டும் என்கிற எண்ணம் பொதுவாக எல்லோருடைய மனதிலும் உண்டு.

அதனால் கட்டிய வீட்டை பல இடங்களில் மக்கள் வாங்க முனைப்பு காட்டுகிறார்கள். அப்படி வாங்க கூடிய இடத்தில் நாம் வாஸ்து படி என்னென்ன விஷயங்களை கவனித்து அந்த இடத்தை வாங்க வேண்டும்.

(பழமையான கட்டிடங்களை வாங்கும் பொழுது மட்டுமே நான் இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

 

1.   வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இடைவெளி, குறைந்தது ஆறு அடிஇருக்க வேண்டும்.

2.   வடக்கு கிழக்கு பகுதியில் உயரமான கோபுரம் போன்ற அமைப்புகள் கூடாது.

3.   வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மதில் சுவர் பொது சுவராக இருத்தல் கூடாது.

4.   வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை விட தெற்கு மேற்கு பகுதியில் உள்ள இடைவெளி அதிகமாக இருத்தல் கூடாது.

5.   நீர்நிலைகள் வடகிழக்கில் மட்டுமே இருக்க வேண்டும்.

6.   தொட்டி வடமேற்கில் மட்டுமே இருக்க வேண்டும்.

7.   இடம் யாருடைய பெயரில் உள்ளது என்கிற விபரமும் தெரிந்திருக்க வேண்டும்.

8.   அந்த இடத்தை என்ன காரணத்திற்காக விற்கிறார்கள் என்கிற விபரமும் தெரிந்திருக்க வேண்டும்.

9.   நாம் வாங்க்கூடிய இடத்திற்கு பேங்கில் லோன் ஏதேனும் இருந்ததா என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்.

10. அந்த இடத்தில் குடியிருந்தவர்களின் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருந்தது என்கிற விவரம் தெரிந்திருக்க வேண்டும்

11. தெருக்குத்து, தெருப்பார்வை ஏதேனும் உள்ளதா என்கிற விவரம்  தெரிந்திருக்க வேண்டும்.

12. இந்த இடத்தில் ஏதேனும் தொழில் செய்திருந்தார்கள் என்றால், என்ன மாதிரியான தொழில் என்கிற விபரமும் தெரிந்திருக்க வேண்டும்..

13. வீடு சதுரம் செவ்வகம் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும்.

14. உள் அமைப்புகள் வாஸ்துபடி அனைத்தும் அமைந்திருக்கிறதா என்கிற விவரங்களை தெரிந்து இருக்க வேண்டும்.

15. இன்னும் சட்ட ரீதியான நடைமுறைகள் நிறைய உண்டு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

16. நான் மேலே குறிப்பிட்டுள்ளஅனைத்தையும் ஒரு வாஸ்து ஆலோசகரின் உதவியால் அந்த கட்டிடத்தை சோதித்து வாங்குவது சிறப்பு.

 

குறிப்பு:

ஒரு இடம் கடனுக்காக ஏலம் விடப்பட்ட சொத்தாக இருந்தால் அது மீண்டும் மீண்டும் ஏலம் விடப்பட கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது.

நோயினாலும் வறுமையினாலும் உள்ளவர்கள் வீடுகளை வாங்கும் பொழுதும் அதே நிலை பின்பு வாங்குபவர்களுக்கு தொடர்கிறது..

                              நன்றி

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits