கிணறு அமைப்பு தென்கிழக்குப் பகுதியில் வருவது சரியா...
கிணறு அமைப்பு தென்கிழக்குப் பகுதியில் வருவது சரியா...
கேள்வி....
நான் குடியேறும் இடமெல்லாம் என்னுடைய வீட்டின் அருகில் தென் கிழக்கு பகுதியில் கிணறு அமைப்பு வந்துகொண்டே இருக்கிறது நானும் இதுவரை மூன்று வீடு மாறி விட்டேன்...
பொதுவாக வாஸ்து சாஸ்திரத்தில் குடியிருப்புக்கு அருகில் கிணறு அமைப்பு வருவது ஆபத்தானது என்று சொல்லுகிறார்களே ஆனால் எனக்கு மட்டும் ஏன் நான் செல்லுமிடமெல்லாம் கிணறு அமைப்பு வந்துகொண்டே இருக்கிறது விளக்கம் கூறுங்கள்..???
பதில்....
பொதுவான வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டிற்கு அருகில் வடகிழக்குப் பகுதியில் கிணறு வரக்கூடிய அமைப்பு நல்லது என்றும், மற்ற பகுதிகளில் கிணறு அமைப்பு வந்தால் கெடுதலான பலன் கொடுக்கும் என்றும் சொல்லுவது உண்மைதான்..
ஆனால் உங்களுக்கு இது போல் தென்கிழக்கு பகுதியில் கிணறு அமைப்பு தொடர்ந்து வருகிறது என்றால் உங்களுடைய வீட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
பெண் வாரிசு மட்டுமே இருக்கக்கூடும்
பெண்கள் அரசு வேலையில் இருக்கக் கூடும்.
பெண்கள் குடும்பத்தை நிர்வாகம் செய்வார்கள்.
பெண்கள் வீட்டின் எஜமானாக இருப்பார்கள்.
பெண்கள் பெயரில் இடம் அமையும்.
உங்களுடைய ஜாதகத்தில் அல்லது உங்களுடைய மனைவியின் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சந்திரன் தொடர்பு பலமாக இருந்தாலும் கூட இதுபோல் உங்களுடைய வீட்டிற்கு அருகில் நீர் நிலைகள் வரக்கூடும்...
நான் இங்கு குறிப்பிட்ட இந்த சூழல் உங்கள் வீட்டில் இருக்குமானால் தென் கிழக்கு கிணறு அமைப்பானது உங்களுக்கு கூடுதலான பலமே...
நன்றி.
PM Krishna Rajan
Vastu Engineer
8220544911
#Vastu
#Engineer
#Well
கருத்துகள்