கடனுக்கு மேல் கடன் ஏற்படுத்தும் கட்டட அமைப்பு....
கடனுக்கு மேல் கடனை ஏற்படுத்திய கட்டட அமைப்பு...
நான் 2013 ஆம் ஆண்டு ஒரு சிறிய தொழிலை சொந்தமாக தொடங்கினேன், அப்பொழுது தொழில் விருத்திக்காக வெறும் 50 ஆயிரம் மட்டுமே கடன் வாங்க நேர்ந்தது ஆனால் இன்றைக்கு அரைக்கோடி கடன்காரனாக உள்ளேன்...
ஒருபக்கம் என்னுடைய தொழில் நன்றாகத்தான் நடக்கிறது, பணமும் வரத்தான் செய்கிறது இருந்தபோதிலும் என்னால் அந்தக் கடனை அடைத்து வெளியே வர முடியவில்லை...
என்று நம்மை அழைத்து புலம்பிய நபரின் வீட்டு வரைபடம் தான் இது..
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..
இது நமது முன்னோர்கள் அனுபவித்து எழுதிவைத்த சொல் வாக்கியம்...
வீட்டின் அமைப்புகள்;
1 வடக்கு பகுதியை விட தெற்குப்பகுதி கூடுதலான காலியிடம்.
2 கிழக்கு பகுதியில் கழிவறை.
3 தென்மேற்கு தலைவாசல் மற்றும் முக்கிய நுழைவாயில்.
4 தென்மேற்கில் மூடியநிலையில் மாடிப்படி அமைப்பு..
பிரச்சனைகளின் துவக்கம்:...
2013 இல் ஆரம்பித்த தொழில் 2015 வரையில் சிறப்பாக சென்று கொண்டிருந்த காலகட்டத்தில் ...
எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஆசை இவருக்கும் ஏற்பட்டிருக்கிறது,
இருக்கக்கூடிய வீட்டில் பல சௌகரியங்கள் குறைவாக இருந்ததால் இன்னும் கொஞ்சம் கூடுதலான பெரிய வீட்டை சில பல சவுகரியங்களுடன் கட்டிக் கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் ஒரு புது வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார்...
அங்குதான் அவருடைய கர்மா வேலை செய்ய துவங்கி, இன்று மிகப் பெரிய கடன் சுமையில் துடுப்பு இல்லாத படகு போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்...
வாஸ்து தவறின் ரிசல்ட்...
வடக்கு பகுதியை விட தெற்குப்பகுதி கூடுதலான காலியிடம் அந்த வீட்டின் உரிமையாளரை நீண்ட காலத்திற்கு அதாவது ஒரு தலைமுறை அளவிற்கு கடன்காரனாகவே வைத்து அழகு பார்க்கும்.
தென்மேற்கு தலைவாசல் ஆண்மகனின் நிர்வாகம், ஆளுமைத்திறன், நம்பிக்கை, நாணயம், கௌரவம், மான மரியாதை, அந்தஸ்து இப்படி அனைத்து விஷயங்களையும் காற்றில் பறக்க விட்டு வேடிக்கை பார்க்கும்...
நன்றி.
PM Krishna Rajan
Vastu Engineer
8220544911
கருத்துகள்