மாஸ்டர் பெட்ரூமின் முக்கியத்துவம்....
நாம் குடியிருக்கும்
வீட்டின் தென்மேற்கு பகுதிக்கு கன்னி மூலை, குபேர மூலை, நிருதி மூலை, நைரூதி மூலை இப்படி
பல பெயர்கள் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது.
பஞ்சபூதங்களில் ஒன்றான
மண்ணுக்குரிய பகுதியாக இந்த பகுதியை குறிப்பிடுகிறோம்.
வாஸ்து சாஸ்திரத்தில்
மற்ற அறைகளை காட்டிலும் இந்த பகுதிக்கு அதிக கூடுதல் கவனம் செலுத்துகிறோம் ஏன்?
மற்ற அறைகளுக்கும்
இல்லாத பெயரான மாஸ்டர் பெட்ரூம் என்ற பெயர் வரக் காரணம் என்ன?.....
வீடு என்றாலும்,
நாடு என்றாலும் அந்த இடத்தை வழிநடத்த ஒரு நல்ல தலைவன் தேவை அதாவது நல்ல ஆண்மகன் தேவை.
அப்படிப்பட்ட ஆண்மகன்
அமர்ந்து நிர்வாகம் செய்யக்கூடிய இடமே தென்மேற்கு பகுதி.
குடும்பத்தின் சுயகௌரவம்,
குடும்ப கௌரவம், ஆரோக்கியம், ஆளுமைத்திறன், சேமிப்பு, வாரிசுகள், ஆயுள் இப்படி அனைத்தையும்
உள்ளடக்கியது இந்த தென்மேற்குப் பகுதி.
ஓரிடத்தில் நிர்வாகத்
திறன், ஆளுமைத் திறன் இவைகளை தீர்மானிப்பதும் இந்த தென்மேற்கு பகுதிதான்.
ஒரு தொழிலை நிர்வாகம்
செய்யக் கூடிய ஒரு ஆண்மகன் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் தென்மேற்கு பகுதியில்
இருந்து எடுக்கும் பொழுது மட்டுமே அது வெற்றி அடைகிறது.
மற்றும் இந்த தென்மேற்கு
பகுதியை சனிக்கிரகத்துடன் ஒப்பிடுவார்கள் காரணம்,
சனிகிரகமே ஒரு நபரின் ஆயுளை தீர்மானிக்கிறது.
இடுப்பு, பித்தப்பை,
கல்லீரல், கணையம், ஆண் பெண் பாலின உறுப்புகள், மலக்குடல், சிறுகுடல், முதுகுதண்டு வடங்கள்,
தொடைப்பகுதி, இருதயம், கர்ப்பப்பை இவைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய இடமும்
இந்த தென்மேற்கு பகுதி.
நான் மேற்குறிப்பிட்ட
இந்த உடல் உறுப்புகள் நல்லவிதமாக இயங்க வேண்டுமானால் தென்மேற்குப் பகுதி நல்ல அமைப்பாக,
அதாவது மாஸ்டர் பெட்ரூம் மட்டுமே வர வேண்டும்.
மேலும் அடுத்த இதழில்
மற்ற பூதங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நன்றி
Vastu Engineer
PM.KRISHNARAJAN
8220544911
கருத்துகள்