கடன் ஏற்பட காரணமான வாஸ்துவின் முக்கிய தவறுகள்.....
மனித வாழ்க்கையில்
உயிர்நாடியாக திகழ்வது பணம் பணம் பணம், இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் வாழ்க்கையில்
பெரும் பகுதியான நேரத்தை செலவிடுகிறோம்.
உலக மக்கள் தொகையில்
3 சதவீதம் மக்களே பணத்தால் தன்நிறைவடைந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. மற்ற அனைவரும்
பணத்தில் பற்றாக்குறையாக வாழ்கிறார்கள்.
இந்த பிரச்சினைக்கு
முதல் முக்கிய காரணம் நான் வாஸ்து என்றே கூறுவேன்.
நீங்கள் குடியிருக்கும்
வீடு சொந்த வீடானாலும் வாடகை வீடானாலும் பலன் என்னவோ அந்த வீட்டில் குடியிருப்பவர்
அனுபவித்தே ஆக வேண்டும்.
நீங்கள் வசிக்கும்
கட்டிடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். L ப போன்ற அமைப்புகள் இருக்குமானால்
அது முற்றிலும் தவறு.
வடக்கு மற்றும் கிழக்கு
பகுதியில் பொது சுவர் இருப்பது தவறு
வடக்கு மற்றும் கிழக்கு
பகுதியில் ஜன்னல்கள் இல்லாத வீட்டில் குடியிருப்பது தவறு,
அப்படி ஜன்னல் இருந்தும்
திறந்து வைக்காமல் இருப்பது தவறு.
திறந்து வைத்தும்
வானம் தெரியாதபடி அமைப்பில் இருப்பது தவறு.
முக்கிய வாசல், ஜன்னல்
இவைகள் அனைத்தும் நீச்ச பகுதியில் இருப்பது,
வட கிழக்கில் குறிப்பாக
வரவேற்பறை அல்லது படிக்கும் அறை மட்டுமே வர வேண்டும். அதை தவிர்த்து கழிவறை, பூஜை அறை,
சமையல் அறை, மாடிப்படி அமைப்பு, குடோன், ஹை சீலிங், லோ சீலிங், லிப்ட் , மிகப்பெரிய
போர்டிகோ, கார் பார்க்கிங், பிரமிடு போன்ற
அமைப்பு இவைகள் அனைத்தும் வருவது தவறு.
வீட்டின் மொத்த அமைப்பில்
தென்மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் கண்டிப்பாக
வரவேண்டும்.
கழிவறை, குளியலறை,
தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, உள்பகுதி படியமைப்பு, பூஜை அறை, ஸ்டோர், குடோன்,
ஹை சிலிங், லோ சீலிங், சமையலறை, முக்கிய தலைவாசல், வரவேற்பறை, போன்ற அமைப்புகள் வருவது
அனைத்தும் தவறு
வீட்டின் வெளிப்பகுதியில்
வடக்கு மற்றும் கிழக்கு குறைவான காலியிடம் விட்டுவிட்டு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில்
அதிக காலி இடத்தை விட்டுவிட்டு வீட்டை அமைத்துக் கொள்வது.
வீட்டின் தென்கிழக்கு
வெளிப்பகுதியில் மூடியபடி அமைப்பு, ஆழ்துளை
கிணறு, கிணறு, தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி, போன்ற அமைப்புகள் வருவது
தவறு.
வீட்டின் வடமேற்கு
வெளிப்பகுதியில் மூடியபடி அமைப்பு, ஆழ்துளை கிணறு, கிணறு, தரைக்கீழ் தண்ணீர் தொட்டி
வருவது தவறு.
வீட்டிற்கு வடமேற்கு
பகுதியில் உள்ள கழிவறையை உபயோகப்படுத்த வீட்டினுள் இருந்து வடமேற்கு, வடக்குப் பகுதியில்
வாசல் வைத்து உபயோக படுத்துவது தவறு.
தென்மேற்கு தெற்கு
மற்றும் மேற்கு - வடமேற்கு வடக்கு, தென்கிழக்கு கிழக்கு இந்த பகுதியில் முக்கிய வாசல்
முக்கிய கேட் மற்றும் தெருக்குத்து, தெரு பார்வை வருவது அனைத்தும் தவறு.
நம்முடைய வீட்டிற்கு
தெற்கு பகுதி, மேற்கு பகுதி, வடமேற்கு பகுதியில் ஊருக்குப் பொதுவான கிணறு, ஆறு, ஓடை,
குளம், குட்டை, பள்ளமான பகுதி இதுபோன்ற அமைப்புகள் வருவதும் தவறு.
மேலும்,
சமைக்கும் திசை,
உணவருந்தும் திசை, பூஜை அறையில் திசை, பீரோ வைக்கும் திசை, தூங்கும் திசை, குளிக்கும்
திசை, கழிவறை கோப்பையின் திசை இவை அனைத்தும் மிகச் சரியாக இல்லாமல் இருப்பது.
வடகிழக்கு தென்மேற்கு
ஒரு வீட்டில் தவறு ஏற்படுமானால் தனது எவ்வளவு திறமை இருந்தும் அது தனக்கு பயன்படாமல்
மற்றவருக்கு பயனுள்ளதாக அமைந்து செல்வம் பொருளாதாரம் பணம் அனைத்தும் கைக்கு எட்டாமல்
வறுமையில் வாழ வேண்டிய சூழல் ஏற்படும். இதை அனுதினமும் தீர்மானிப்பது அவரவர் குடியிருக்கும்
வீட்டு அமைப்பே.
மாற்றமே முன்னேற்றம்....நீங்கள்
மாறத் தயாராக இருந்தாள் இந்த இயற்கை ஒரு நல்ல வாஸ்து படியான, பணவரவுக்காண வீட்டை அமைத்து
கொடுத்து மென்மேலும் வளர வாய்ப்பளிக்கும்.
நன்றி
PM.Krishnarajan,
Vastu Engineer,
8220544911
கருத்துகள்