இரு தாரத்தை கொடுத்தது வாஸ்துவா?? ஜாதகமா??

எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒரு வாடிக்கையாளரின் அழைப்பினை ஏற்று ஒரு வீட்டிற்கு வாஸ்து பார்க்க சில வாரங்களுக்கு முன் செல்ல நேர்ந்தது.. நாமும் வழக்கம்போல் அந்த வீட்டில் ஏதோ தவறு இருக்கும் என்று... அந்த வீட்டில் மேலும் கீழும் ஏறி இறங்கி பல கோணங்களில் என்னுடைய இன்ஜினியர் மூளையை உபயோகப்படுத்தி அந்த வீட்டில் உள்ள குறை நிறைகளை ஓரளவுக்கு கண்டுபிடித்தேன்.

ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்து ஓரிடத்தில் சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்து அம்மா இப்பொழுது கூறுங்கள் உங்க வீட்டில் என்ன பிரச்சனை எதற்காக என்னை அழைத்தீர்கள், காரணம் கூறினால் உங்க வீட்டில் உள்ள குறை நிறைகளை எல்லாம் எடுத்து வைக்க இயலும் அதற்கான மாற்றத்தை என்னால் கொடுக்க இயலும் என்று அவர்களிடம் என்னுடைய கேள்வியை முதலில் முன்வைத்தேன்.

அந்த வீட்டின் பெண்மணியோ எந்த சலனமும் இல்லாமல் என்னுடைய மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் அதற்கு இந்த வீடு உறுதுணையாக உள்ளது ஐயா பார்த்து சொல்லுங்கள் என்று படாரென்று போட்டு உடைத்தார்..



எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தலைக்கேறியது ஒன்றும் புரியவில்லை இருந்தபோதிலும் அவரிடம் அடுத்த நொடி கேள்விகளைத் தொடுத்தேன் இங்கு நிற்பது உங்கள் மகன், கூட இருப்பது உங்கள் மருமகள் தானே என்றேன். அவர்களும் ஆமாம் ஐயா.. என்றவாறு தலையை அசைத்தார்கள்.

ஏன் என்ன பிரச்சனை இரண்டாவது திருமணம் யாருக்கு என்று விடாமல் கேள்விகளை முன்வைத்தேன்.

அந்தப் பெண்மணி சிறிதுகூட சலனமில்லாமல் என்னுடைய மகனுக்கு தான் இரண்டாவது திருமண ஏற்பாடு என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சரிங்க இது ஒருபுறம் இருக்கட்டும் அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைகள் என்ன?

வீடு வெளித்தோற்றத்தில் வாஸ்துபடி கட்டப்பட்டிருந்தாலும் வீட்டிற்கு மேற்கு பக்கம் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு இவைகளை மூன்றையும் சேர்த்தார் போல் ஒரு ரோடு பார்வை வருகிறது

இது மட்டுமே இந்த வீட்டில் உள்ள வாஸ்து குறை.

சரிங்க விஷயத்துக்கு வருவோம்.

இந்த பெண்மணிக்கு வயது முதிர்ந்த கணவர் அந்த கணவரின் பூர்வீக சொத்து ட்ரில்லியன் கணக்கில் உள்ளது.

இவர்களுக்கு இருப்பதோ ஒரு ஆண் வாரிசு மட்டுமே.

இந்தப் பெண்மணிக்கு ஒரு பிரபலமான ஆன்மீக குரு மீது பற்று கொஞ்சம் ஜாஸ்தி.

அந்த ஆன்மீக குருவுக்கு ஆன்மீக பக்தைகள் அதிகம்.

அதில் ஒரு பக்தையின் மகளை இந்தப் பெண்மணியின் மகனுக்கு ஜாதகம் பொருத்தம் எதுவும் பார்க்காமல்  திருமணம் நடந்தேறியது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இங்குதான் பிரச்சனை ஆரம்பம்...

அந்தப் பெண்மணியின் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லையாம் இதுவரை.

அந்தப் பெண்மணியோ விடாப்பிடியாக இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்து பார்த்திருக்கின்றனர்.

அதில் அந்த மருமகளின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் இல்லை இந்தப் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து இருக்கக் கூடாது என்று உறுதியாக நம்பும் படியாக அந்த நபர் எடுத்துரைத்ததன்பேரில் இவர்கள் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்கள்..

என்னுடைய கேள்வி.. அந்தப் பெண்மணியை நோக்கி..

இந்த உலகத்தில் ஒரு முறையும் முழுவிதியை பார்த்து சொல்லும் அளவிற்கு திறமை வாய்ந்த நபர்கள் எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் இல்லை உங்களுடைய முடிவை சற்று மீண்டும் மறு பரிசீலனை செய்யுங்கள் என்று எடுத்துக்கூறி அந்த மருமகளையும் மகனையும் அழைத்து இருவருக்கும் சில உபதேசங்கள் சொல்லிவிட்டு அந்த வீட்டை உடனடியாக காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு மாறிக்கொள்ளும் என்ற ஆலோசனையும் வழங்கி அங்கிருந்து விடைபெற்றேன்.

 

ரோடு பார்வையின் பலன்...

1.தென்மேற்கு ரோடு பார்வை ஏற்பட்டால் அந்த வீட்டில் உள்ள ஆண்கள் வீட்டை விட்டு வெளியேற நேரிடும்.

2.அந்த வீட்டிலுள்ள வாரிசுகளுக்கு திருமணம் தடை ஏற்படும் அல்லது குழந்தை பாக்கியம் தடை ஏற்படும்.

3.அந்த வீட்டில் ஆண்களுக்கு நிர்வாகத் திறன் இல்லாமல் போய்விடும்.

4.தத்து எடுத்தல் போன்ற சூழல் நிலவும்.

5.மாமியார் கொடுமை உண்டு.

6.ஆண்கள் செயலற்று போய் விடுவார்கள்.

7.பெண்களுக்கு கருவை சுமக்கும் கருவறை செயல்படாமல் போய்விடும்

நான் மேற்கூறிய இந்த தவறுகளை அந்தப் பெண்மணி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நன்றி

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits