ஒரே மாதிரியான பிரச்சனைகள்... ஒரே மாதிரியான வீடுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு வாஸ்து பார்க்க சென்ற இடத்தில் நான் பார்த்து வியந்தது.

ஆமாங்க நான் பார்த்த வீடு போலவும், அந்த வீட்டில் உள்ள பிரச்சினைகள் போலவும், அங்கு நிறைய வீடுகளில் நம்மால் காண முடிகிறது

ஒரே அளவில் உள்ள மனை அமைப்புகள் மற்றும் கட்டிட அமைப்புகளும் ஒரே மாதிரியான பிரச்சினைகளும்....

நீளத்தில் 40 அடியும், அகலத்தில் 16 அடியும் உள்ள மனைகளை நிறைய பார்க்க முடிகிறது. அங்குள்ள சிலபல கொத்தனார்கள் மற்றும் கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கு வாஸ்து தெரியும் என்று சொல்லிக்கொண்டும். வாஸ்துப்படி தான் கட்டிக் கொடுப்பதாகவும் கூறிக்கொண்டும், நான் வரைபடத்தில் காண்பித்துள்ள வீடுகள் போல் அனேக வீடுகளை பார்க்க நேர்ந்த பொழுது என்னுடைய மனம் மிகவும் வேதனைக்கு உள்ளாகியது..

சரிங்க விஷயத்துக்கு வருவோம்…




நான் பார்க்க சென்ற வீட்டில் வெளிப்புறத்திலும், வீட்டின் உள் அமைப்பிலும் வாஸ்துப்படி கட்டப்பட்டதாக தோன்றினாலும், நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி தங்கள் வீட்டுக்காரரை பற்றி முழு விவரங்களை கூறுங்கள் என்றேன்.

நான் பார்க்க சென்ற வீட்டில் வெளிப்புறத்திலும், வீட்டின் உள் அமைப்பிலும் வாஸ்துப்படி கட்டப்பட்டதாக தோன்றினாலும், நான் அவரிடம் கேட்ட முதல் கேள்வி தங்கள் வீட்டுக்காரரை பற்றி முழு விவரங்களை கூறுங்கள் என்றேன்...

அந்தத் தாயுள்ளம் கொண்ட அந்த பெண்மணியிடம் இருந்து நான் எதிர்பார்க்காத அந்த பதில் அவர்களிடம் கிடைத்தது..

அந்த படுபாவி சண்டாளன் என்னையும் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணோட இதே ஊரில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான்... நான் என்ன தவறு செய்தேன் ஐயா என்று கூறிக்கொண்டு கண்ணீர்மல்க திறந்த மடை போல கொட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

நான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதா, அல்லது அவர்களுக்கு வாஸ்துவில் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லுவதா, அல்லது விதி வலியது என்று சொல்லுவதா, அல்லது உங்கள் ஊரின் சூழல் என்று நான் கூறுவதா...

சில நேரத்தில் என்னையை இந்த பிரபஞ்ச பேராற்றல் என்னை இதுபோல சூழலில் மாற்றிவிடுவது இயற்கையே.

1.மனை பிரித்தவரை தவறு என்று கூறுவதா

2.தனக்கு வாஸ்து தெரியும் என்றும் கட்டி கொடுத்தவரைக் குறை கூறுவதா

3.அந்த வீட்டில் வாஸ்து தவறை எடுத்துக் கொள்வதா

4.அந்தக் குடும்பத் தலைவனின் நடத்தையை எடுத்துக் கொள்வதா

5.அந்தக் குடும்ப நபரிகளின் ஜாதகத்தை எடுத்துக் கொள்வதா

6.விதி என்பதா அல்லது கர்மா என்பதா அல்லது அவர்கள் வாங்கி வந்த வரம் என்பதா

சரிங்க அந்த வீட்டில் என்ன தான் தவறு???

அந்த வீட்டில் மட்டுமல்ல அந்த ஊரில் உள்ள எல்லா வீட்டிற்குமே தென் மேற்கு பகுதியில் 11*11 அளவில் கட்டிடம் கட்டி கொடுத்து, அந்த அறையில் உள்ளேயே சமையலறையும் வைத்துக் கொடுப்பது தான் மிகப்பெரிய தவறுங்க.....

PM Krishna Rajan

Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits