தற்கொலைக்கு காரணம் விதியா அல்லது வாஸ்துவா
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நமக்கு அறிமுகமாகிய ஒரு குடும்பத்தில்
பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் திடீரென்று தற்கொலை செய்து கொண்டான்.
காரணம் புரியவில்லை... தற்சமயம் உள்ள சூழல் கூட வீட்டில்தான் இருந்து
ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது, பிள்ளைகளும் வீட்டிலேயேதான் இருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது
அப்படியிருந்தும் ஏன் இந்த தற்கொலை ???
இங்கு விதி முடிந்து விட்டதா... அல்லது அந்த வீட்டின் வாஸ்து தவறு
தற்கொலைமுடிவை எடுக்க வைத்து விட்டதா.?
வாஸ்து
தவறுகள்
தெற்கு பகுதி சார்ந்த கிணறு அமைப்பு,
வடகிழக்கு வெட்டுப்பட்ட அமைப்பில் போர்டிகோ,
மற்றபடி இந்த வீட்டில் குறை சொல்லும்படியான அமைப்புகள் எதுவும்
இல்லை.
வடகிழக்கும் தென்மேற்கும் ஆண் மக்களுக்கு உண்டான பகுதி. இப்பகுதியில்
தவறு ஏதேனும் ஏற்படும்போது அந்த வீட்டில் உள்ள ஆண்கள் நேரடியாக பாதிக்கப்படுவது உறுதி.
தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நீர் நிலைகள் தற்கொலை எண்ணத்தை
கொடுக்கக்கூடியது.
விதி :
விதி என்று சொல்வதை விட கர்மா என்று சொன்னால் உங்களுக்கு எளிதாக
புரியும்.
கர்மா என்பது இரண்டு வகைப்படும். ஒன்று பூர்வ ஜென்மம் அதாவது நம்முடைய
மரபு சார்ந்தது. மற்றொன்று நம்முடைய எண்ணங்கள், மனநிலை மற்றும் சூழ்நிலைகள், இவைகளும்
நம்முடைய ஆழ்மனதில் பதிந்து கர்மாவாக வேலை செய்கிறது.
ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவருக்கு தொடர்ச்சியாக
பல நாட்கள் வந்து போயிருக்கும். அல்லது அவர் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்
அல்லது அவர் அதுபோல ஒரு சூழ்நிலையில் அவர் சிக்கிகொண்டு இருந்திருப்பார்.
இந்த சூழ்நிலையை அவர் தன்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு
அவரை உருமாற்றி இருக்கிறது.
சரி நண்பர்களே இங்கு நாம் விஷயத்திற்கு வருவோம்.
வாஸ்து என்பது எண்ணங்களையும் சிந்தனைகளையும் தூண்டி விட்டு கொண்டே
இருக்கும். வீட்டின் தன்மைக்கு ஏற்ப அதாவது பாஸிட்டிவ், நெகட்டிவ்.
ஒரு நெகட்டிவான வீட்டில் அவருடைய எண்ணம் நெகட்டிவாக இருக்கும்
பொழுது அவருடைய சூழல் அதற்கு சாதகமாக இருக்கும் போது எடுக்ககூடிய முடிவு விபரீதமாக
இருக்கிறது.
விதையிலிருந்து செடி வந்ததா அல்லது செடியிலிருந்து விதை வந்ததா?
இங்கு இரண்டும் ஒரு சேர நடந்த நிகழ்ச்சி.
அதே போல்தான் அவருடைய விதியும் வாஸ்துவும் ஒருசேர நடந்த நிகழ்வுகள்.
இதைப் படிக்கும் நீங்கள் கூட ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள்
என்று நான் கூறுவேன். இவ்வளவு பரந்த மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் எவ்வளவு பேருக்கு
இதனுடைய பேருண்மை தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு..
நன்றி
PM. KRISHNA RAJAN
VASTU ENGINEER
8220544911
கருத்துகள்