புது வீடு கட்ட போகிறீர்களா இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்
இந்தக் கட்டுரை முழுவதும் நீங்கள் எதை செய்யக் கூடாதவைகள் மற்றும் மாற்றக்கூடதவைகளை சற்று விபரமாக விளக்க உள்ளேன்.
இந்த கட்டுரை அறிவியலையும் அனுபவத்தையும் உள்ளடக்கியது படிக்கும் அனைவருக்கும் பயனளிக்க கூடியது.
இந்த நிலையான பூமியில் நிலையான கட்டிடங்களை கட்டும் பொழுது கட்டிடத்திற்குள் சூரிய வெளிச்சத்தை (விட்டமின் டி யை)வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் சீரான முறையில்கொண்டு வருவதே வாஸ்து.
இதற்கு பூமியின் வேகம் மற்றும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், பருவநிலைகள் இவைகளை கணிதம் செய்து ஒரு வீட்டிற்கு திசைகாட்டி மற்றும் ஜிபிஎஸ் உதவியுடன் வரைபடம் தயாரித்துக் கொடுக்கும் பொழுது அந்த வீட்டில் வசிக்க கூடியவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ முடிகிறது.
குடும்ப ஒற்றுமை,
ஆரோக்கியம்,
நிம்மதி மூன்றையும் மட்டுமே உள்ளடக்கியது வாஸ்து.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்று நமது முன்னோர்கள் சொல் வாக்கியத்திற்கு இணங்க,
பஞ்ச பூதங்களான நீர் நெருப்பு நிலம் காற்று மண் ஆகாயம் இந்த ஐந்து பூதங்களை நம் குடியிருக்க கூடிய வீட்டில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சரியான அளவு முறையில் வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் படியான கட்டமைப்புக்களை உருவாக்குவது வாஸ்து.
பெரும்பாலும் ஐந்து பூதங்கள் பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் நம் கட்டக்கூடிய வீட்டுக்கு ஆகாய பூதத்தில் தவிர்த்து மற்றும் பூதங்களை சரியாக பயன்படுத்தினால் வாழ்வு வளமானதாக சிறப்பானதாக பலம் பொருந்தியதாக வலம் பொருந்தியதாக அமைத்துக்கொள்ள முடியும்.
நாம் அறுசுவை விருந்துத்தில் பங்கு பெற்ற அனுபவங்கள் அநேக பேருக்கு உண்டு.
அதில் இலை போட்ட பிறகு உப்பு ஊறுகாய் கூட்டு பொரியல் வடை அப்பளம் இனிப்பு மற்றும் கார பதார்த்தங்கள் பரிமாறுவது வழக்கம் இவைகளெல்லாம் சைடிஸ் என்று சொல்லுவோம் எத்தனை எத்தனை வகை சைடிஸ் பரிமாறினாலும் மெயின் கோர்ஸ் என்று சொல்லக்கூடிய சாதம் இருந்தால்தான் அந்த விருந்து முழுமையான அறுசுவை விருந்து ஆக நம்மால் அதை அனுபவிக்க முடியும் அதேபோல்தான் வாஸ்துவும்
இந்த உலகில் ஜோதிடம், நியூமராலஜி, டாரட், ராஜநிலை ,கைரேகை, கிர்லியன் போட்டோகிராபி,இப்படி எண்ணற்ற கலைகள் மூலம் எதிர்காலத்தை கடந்த காலத்தை நிகழ்காலத்தை தெரிந்து கொள்ள முடிந்தாலும் இவைகள் மூலம் நடக்க இருப்பதை மாற்ற ஒருபொழுதும் இயலாது.
இதுபோன்ற கலைகளுக்கு அப்பாற்பட்டு வாஸ்து படியான ஒரு கட்டிட அமைப்பை மனித வாழ்வை வளமானதாக நலமாகவும் நிம்மதியாகவும் உருவாக்கும் வல்லமை படைத்தது.
ஆகையால் வாஸ்து படியான ஒரு வீட்டைத் தவிர்த்து மற்ற தவறான வீட்டில் இருந்து கொண்டு எத்தனை நியூராலஜி பார்த்தாலும் எத்தனை ஜோதிடம் பார்த்தாலும் எத்தனைமுறை இறைவனைத் துதித்தாலும் போற்றினாலும் பாராயணம் செய்தாலும் தொழுதாலும் பிரசங்கம் செய்தாலும் சார்ஜர் இல்லாத ஆண்ட்ராய்டு போன் போல ஆகிவிடும்.
1.வீடு கட்ட தேர்ந்தெடுக்க கூடிய இடம் சதுரம் மற்றும் செவ்வக மட்டுமே இருக்க வேண்டும்.
அதில் கட்டக்கூடிய கட்டிடமும் சதுரம் மற்றும் செவ்வக மட்டுமே இருக்க வேண்டும். (மற்ற அனைத்து அமைப்புகளும் தவறே)
ஒழுங்கற்ற கட்டிட அமைப்பில் வீட்டிற்கு வரக்கூடிய சூரியவெளிச்சம் அளவுக்கு அதிகமாக வரக்கூடும் அல்லது சூரிய வெளிச்சம் வராமல் போகக் கூடிய சூழல் ஏற்படும்.
2.வீட்டின் உள் அமைப்பில், வடகிழக்கில் வரவேற்பறை தென்கிழக்கு சமையலறை தென்மேற்கில் கணவன்-மனைவி ஓய்வறை வடமேற்கில் விருந்தினர் அறை தெற்குப்பகுதியில் மற்றும் கழிவறைகள் வரவேண்டும்.
வடகிழக்கு வரவேற்பறை என்பது விட்டமின் டி யை வீட்டிற்குள் இயற்கையிலேயே நமக்கு தடையில்லாமல் கிடைக்கிறது.
தென்கிழக்கு சமையலறை சுகாதாரமான உணவை சமைப்பதற்கு வழிவகை செய்கிறது.
தென்மேற்கு ஓய்வறையில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு குடும்பம் நடத்தக்கூடிய அந்தரங்க பகுதி அங்கு அதிகமான வெளிச்சம் தேவையில்லை.
கழிவறைகளை மேற்கூறிய மூன்று பகுதியில் அமைத்துக்கொள்ள முடியாது ஆகையால் வடமேற்குப் பகுதியில் அமைப்பது சிறப்பு.
3.ஆழ்துளை கிணறு தரைக்கு கீழ் தண்ணீர் தொட்டி கிணறு போன்ற அமைப்புகள் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு இந்த பகுதியில் மட்டுமே வரவேண்டும்.
தண்ணீர் தேக்கி வைக்க உதவும் தொட்டி வீட்டின் மொத்த அமைப்பில் தென்மேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும்.
தண்ணீரின் குணம் எப்பொழுதுமே தாழ்வான பகுதியை நோக்கி நகரும் தன்மை உடையது ஆகையால் அதை வடகிழக்குப் பகுதியில் தாழ்வான அமைப்பாக வைத்துக் கொள்வது சிறப்பு.
தண்ணீரைத் தேக்கி வைக்கும் போது எடை அதிகமாக காணப்படும். அதனால் அதை தென்மேற்கு வீட்டின் மேல் கூரையில் அமைத்துக்கொள்வது சிறப்பு.
4.கழிவுநீர் தொட்டி வடமேற்கு பகுதியில் மட்டுமே வரவேண்டும்.
கழிவு நீர் தொட்டியில் இருந்து வரக்கூடிய வாய்வு வடமேற்கு ஒரு பகுதியை தவிர மற்ற பகுதியில் அமைக்கும் பொழுது அந்த வீட்டில் உள்ளவர்கள் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
5.வீட்டிற்கு வடக்கு - கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் விட்டும் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் குறைவான காலி இடத்திலும் கட்டிடங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலி இடங்களை விடும்பொழுது இயற்கையிலேயே விட்டமின் டி வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் தங்குதடையில்லாமல் நாம் அனுபவிக்க முடியும்.
6.கார் நிறுத்தத்திற்கு என்று தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும்.
வடகிழக்குப் பகுதியில் கார் நிறுத்தம் வரும் பொழுது வீட்டிற்கு கிடைக்கக்கூடிய சூரிய வெளிச்சம் தடைபடுகிறது.
7.வடகிழக்கு ஒரு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் மாடிப்படிகளை அமைத்துக் கொள்ளலாம்.
மாடிப்படி என்பது அதிக எடை மற்றும் அந்த இடத்தை மூடி அமைப்பை உருவாக்கி விடும். அதனால் வடகிழக்குப் பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் மாடிபடி அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
8.தெருக்குத்து மற்றும் தெருப்பார்வை இல்லாத இடத்தில் வீடு கட்ட இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தெருக்குத்து தெருபார்வையில் வசிப்பது தேவைக்கு அதிகமான விட்டமின் டி யை வீட்டிற்குள் அனுமதித்துக் கொண்டே இருப்பது.
9.பூஜை அறை, வழிபாட்டு அறை, தியான அறை, தொழுவோம் அறை இவைகளை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் வராமல் கட்டிடங்கள் கட்டுவது சிறப்பு.
வடகிழக்கில் மற்றும் தென் மேற்கில் வழிபாடு அறைகளை வைக்கும்பொழுது அந்த இடம் முற்றிலும் மூடப்பட்ட இடமாக மாறி அந்த இடத்தின் முழு பலனையும் நாம் அனுபவிக்காமல் நமக்கு நாமே தடைவிதித்து கொள்கிறோம்.
ஒவ்வொரு ஊருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள், பள்ளிவாசல், சர்ச் கண்டிப்பாக இருக்கும் அங்கு சென்று இறைவனை மனதார துதித்து பாராயணம் செய்து போற்றி வழிபாடு செய்து கொள்ளலாமே.
10.சரியான திட்டமிடல் வேண்டும் சரியான வரைபடம் வேண்டும் அனுபவமிக்க நிபுணர்களை அருகில் வைத்துக்கொண்டு வீடுகளை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.
வருடக்கணக்கில் கட்டிடங்கள் கட்டுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும் காரணம் மணல், செங்கல், கம்பி மற்றும் சிமெண்ட் இவைகளின் தரம் பாதிக்கப்படும்.
ஒரு தனி மனிதனின் வளர்ச்சியே ஒரு வீட்டின் வளர்ச்சி, ஒரு வீட்டின் வளர்ச்சியே ஒரு தெருவின் வளர்ச்சி, ஒரு தெருவின் வளர்ச்சியே ஒரு ஊரின் வளர்ச்சி, ஒரு ஊரின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி எனவே வாஸ்து என்பது ஒரு தனி மனித வளர்ச்சிக்கு மட்டுமே உகந்தது.
அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வியாபார ஸ்தலங்கள், மக்கள் அதிக கூறக்கூடிய திரையரங்குகள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் இவைகள் வாஸ்து விதிமுறைகளுக்குள் ஒருபோதும் வருவதில்லை.
வாஸ்து வாஸ்தவம்தான்
PM Krishna Rajan - Vastu Engineer
8220544911
கருத்துகள்