குடியிருக்கும் வீடு, வாடகை வீடு என்றால் அது நம்மை பாதிக்காது என்ற ஒரு கருத்து நிலவுகிறது அது நிஜமா?
நாம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இரண்டு, மூன்று, நான்கு, ஆறு சக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தக்கூடிய வாகனம் அதாவது நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம் சொந்தமானதாகவும், வாடகை வாகனமாகவும் இருக்கலாம் அல்லது அரசாங்க வாகனங்களாகக் கூட இருக்கலாம்.
நாம் பயணம் செய்யக்கூடிய வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களை மட்டுமே நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.
1. நல்ல ஓட்டுநரா?
2. பிரேக் பிடிப்பதற்கு இருக்கா?
3. சீட் பெல்ட் இருக்கா?
4. ஏர்பேக் இருக்கா?
5. எவ்வளவு வேகம் போனாலும் பயம் இல்லாமல் இருக்க முடியுமா?
இதுபோல இன்னும் பல அம்சங்களை பார்த்துதான் நாம் பயன்படுத்துகிறோம்.
இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் அதில் பயணம் செய்தவர்களே முதலில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த வண்டியை தயாரித்தவர் மீதோ விற்பனை செய்தவர் மீதோ வாகனத்தின் உரிமையாளர் மீதோ ஏதாவது ஒரு பாதிப்பு உண்டாகிறதா? இல்லை ஒருபோதும் அதுபோல் நடப்பதில்லை. அந்த வாகனத்தில் பயணம் செய்த அத்தனை பேர் மீது மட்டுமே நேரடியாக பாதிப்புகள் ஏற்படுகிறது.
8220544911
அந்த இடத்தைப் பொருத்தவரை அதில் யார் குடியிருக்கிறார்களோ அவர்கள்மீது மட்டுமே நல்ல பலனோ அல்லது தீய பலனையோ கொடுக்க வல்லது. வீட்டின் அமைப்பு தவறாக இருக்கும் பொழுது அந்த வீட்டின் உரிமையாளருக்கும் குறிப்பிட்ட சதவீதம் பாதிப்பில் பங்கு உண்டு.
நன்றி
PM.KRISHNARAJAN - Vastu Engineer
8220544911
கருத்துகள்