மனோபயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமான வீட்டு அமைப்புகள்..!

 

ஐயா வணக்கம் நான் கோவையில் இருக்கிறேன். நான் ஒரு அரசு ஊழியர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலணி போல் அமைப்புள்ள ஒரே மாதிரியான தோற்றம் உள்ள 20 வீட்டில் ஒரு தனி வீட்டை விலைக்கு வாங்கி குடி வந்துள்ளேன். இங்கு வந்த பிறகு எனது மனம் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளது, மனோ பயம் என்னை தொற்றிக் கொண்டுள்ளது.

நான் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சௌகரியங்களும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள், இருந்தபோதிலும் எனது மனோ பயத்திற்கும் நான் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து தவறுகள் ஏதாவது இருக்குமா அய்யா உதவுங்கள்.

 

பதில் :

ஐயா வணக்கம் உங்களுடைய மேலான கேள்விக்கு நன்றி.

நமது தென்னிந்திய கலாச்சாரமே கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு உலக நாடுகளுக்கு முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்வது.

கால மாற்றத்தாலும், நாகரீக வளர்ச்சியாலும் இன்றைக்கு காலனி போல வீடுகளும், அடுக்குமாடி  குடியிருப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து பழகியவர்கள் தனி வீடாக அமையும் போது மனதில் மாற்றம் ஏற்படுவது என்பது சகஜமே.

ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் இரட்டை குழந்தைகளின் உருவ அமைப்பு ஒரே போல் இருந்தாலும், குணநலன்கள், செயல்பாடுகள், சிந்தனைகள், என அனைத்தும் வேறு வேறாகத்தான் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைத் தரம் கூட வேறுவிதமாகத்தான் அமைகிறது.

அவ்வாறு இருக்கும் பொழுது ஒரே மாதிரி அமைத்துள்ள அந்த வீடு உங்களுக்கான வீடாக அமையாமல் இருந்தாள் அது உங்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கொடுக்காது.

உங்களுடைய வீடு உங்களுடைய lifestyle ஏற்றார்போல் வீட்டின் அமைப்புகள் அமையாமல் எதிர்ப்பதமாக அமைந்திருப்பது, என்னுடைய அனுபவத்தில் ஒரு மனிதரைப் போல் இன்னொரு மனிதனை இறைவன் படைக்கவில்லை. அதேபோல், ஒருவருடைய வீடு போல் இன்னொருவருக்கு வீடு அமைவதில்லை என்பதை என்னால் உறுதிபட கூற முடியும்.

 

மனநலம் தொடர்பான பிரச்சினைக்கு, சரியான தீர்வு காண அமைப்புகள் :

உங்களுடைய வீட்டை உங்களுடைய  lifestyle ஏற்றார்போல் வீட்டின் அமைப்புகளை திருத்தி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் குடியிருக்கும் வீட்டுப் பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் உள்ள  ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவையுங்கள்.

சூரிய ஒளிக்கதிர் உங்களது வீட்டிற்குள்  பிரவேசிக்கும் போது மனநலம், உடல்நலம் அனைத்தும் வளம் பெறும்.

கிழக்குப் பகுதியிலும், வடக்கு பகுதியிலும் உயரமான மரங்கள் இருந்தால் கிளைகளை மட்டும் வெட்டிவிட்டு சூரிய கதிர்களை வீட்டிற்குள் அனுமதியுங்கள்.

வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னல்களுக்கு திரைச்சீலை போட்டிருந்தாள் அதை சற்று திறந்து வைத்து சூரியனின் எண்ணிலடங்கா ஆற்றலை பெற்று மகிழுங்கள்.


PM.KRISHNARAJAN - Vastu Engineer

8220544911

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits