கிழக்கு மற்றும் வடக்கு ஜன்னல் அமைப்புகள்

 

பதில் :

நம்முடைய வீட்டிற்கு தலைவாசல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்தது ஜன்னல்கள். தலைவாசல் ஒரு வீட்டிற்கு உயிர் என்றால் அந்த உயிருக்கு மூச்சுக்காற்றாக இருப்பது ஜன்னல்களே.

 

வடக்கு ஜன்னல் :

வடக்கு ஜன்னல் என்பது நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் வடக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த வடக்கு ஜன்னல் வீட்டின் ஆண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. எனவே வடக்கு ஜன்னலை பகல்பொழுது முழுவதும் திறந்து வைப்பதே நல்லது.

ஜன்னல் இருந்து திறந்து வைக்காமல் இருப்பதும், ஜன்னல்கள் இல்லாத அமைப்பில் குடியிருப்பதும் தவறு. இதனால் ஆண்களின் வருமானம் பாதிக்கப்படும். பல இடங்களில் பெண்களின் வருமானத்தை வைத்து குடும்ப நடத்தும் சூழ்நிலையில் தள்ளப்படுவதும் உண்டு. 

 

கிழக்கு ஜன்னல் :

கிழக்கு ஜன்னல் நம்முடைய வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிழக்கு சுவற்றில் வரக்கூடியது. இந்த கிழக்கு ஜன்னலே வீட்டில் உள்ளவர்களின் அனைவரின் ஆரோக்கியத்தை தீர்மானிப்பது.

அதுமட்டுமல்லாது பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கவல்லது. இந்த கிழக்கு ஜன்னலே பெண்களின் வருமானத்தை தீர்மானிப்பது. கிழக்கு பகுதியில் ஜன்னல் இல்லாமல் இருப்பதும், ஜன்னல்கள் இருந்தும் திறந்து வைக்காமல் இருப்பதும் இரண்டுமே தவறு.

கிழக்கு பகுதியில் ஜன்னல்கள் இல்லாத போது அனைத்து கெட்ட பலன்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் மீதே அமையும். அதில் ஆண், பெண் இருவருக்குமே நிரந்தர வேலையில்லாத நிலைமை ஏற்படக்கூடும். திருமணத்தடை ஏற்படும். கண் பார்வை மற்றும் காது கேளாத நிலை ஏற்படக்கூடும். அதிகப்படியான கற்பனைக்கு ஆளாகி மனநலத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு, பெண்களுக்கு தைராய்டு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.



PM.Krishnarajan - Vastu Engineer

Conatct - 8220544911

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits