இடத்தைச் சுற்றியுள்ள அமைப்புகளும் அதனுடைய பலன்களும்
1. ரயில்பாதை அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
ரயில் செல்லும் பொழுது அதனுடைய அதிர்வுகளால் எளிதில் கட்டிடங்கள் பலம் இழந்து விடும். அதனால் ரயில்பாதையின் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள்.
2. மேம்பாலங்கள் இருக்கும் இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான மேம்பாலங்கள் வருவது கண்டிப்பாக தவறு.
3. செல்போன் மற்றும் மின்சார கோபுரங்களுக்கு கீழ் வீடு கட்டக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
செல்போன் மற்றும் மின்சார கோபுரத்தில் ரேடியேஷன் கதிர்கள் அதிகமாக இருப்பதால் அதன் அருகில் குடியிருக்கக்கூடாது என்பார்கள்.
அதேபோல் நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் செல்போன் கோபுரங்கள் மற்றும் மின்சார கோபுரங்கள் வருவது முற்றிலும் தவறு.
4. கோவில் கோபுரங்களின் நிழல் விழும்படியான இடத்தில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்களே, அதற்கான காரணம் என்ன?
நம்முடைய இடத்திற்கு மிகவும் அருகில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உயரமான கோபுரம் வருவது முற்றிலும் தவறு. மற்ற இடங்களில் தாராளமாக குடியிருக்கலாம்.
5. மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
மனிதனின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நலன் கருதியே மயானம் அருகில் குடியிருக்கக்கூடாது என்கிறார்கள்.
6. மலைகள், குன்றுகள் உள்ள இடங்களில் குடியிருப்பு இருக்கக்கூடாது என்கிறார்கள். அதற்கான காரணம் என்ன?
நம்முடைய இடத்திற்கு மிக அருகில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உயரமான மலைகள், குன்றுகள் வருவது மிக மிகத் தவறு. காரணம் சூரியனிடமிருந்து வரக்கூடிய உயிர் சக்தி நமக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டு ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகள் வரக் காரணமாகிவிடும்.
கருத்துகள்