சொந்தவீடு எப்பொழுது அமையும்

கேள்வி :
ஐயா வணக்கம் என்னுடைய பெயர் வசந்த் 18-04-1981 காலை 10 - 30 மணிக்கு பிறந்தேன் எனக்கு இன்றுவரை சொந்த வீடு இல்லை, வாடகை வீட்டை அடிக்கடி மாற்றிக் கொள்கிறேன், அதே போல் என்னால் ஒரே இடத்திலிருந்து நிரந்தரமாக தொழில் செய்ய முடியவில்லை, எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஐயா.

பதில் :
அன்பு நண்பரே தங்களின் மேலான கேள்விக்கு நன்றி…
தங்களின் ஜாதகத்தை kp  முறையில் ஆய்வு செய்ததில் உங்களுக்கு தற்சமயம் குரு திசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருக்கிறது.
மூன்றாம் பாவகத்தில் சந்திரனே அமர்ந்து 3,12 என்ற தொடர்பில் இருப்பதால் உங்களால் எந்த ஒரு பலனையும் நீண்ட காலத்திற்கு அனுபவிக்க  முடியாது.
பொதுவாகவே சந்திரனுடைய பலன் மாறிக் கொண்டே இருக்கக்  கூடியது.அதனால் உங்களுடைய மனம், இருப்பிடம், தொழில் இவைகள் எதுவுமே நிரந்தரமாக உங்களால் ஒரு இடத்தில் உட்கார்ந்து அனுபவிக்க முடியாது.
சந்திரனுடைய தொடர்புகள் இந்த மாதிரி  வரும்பொழுது ஒரு இடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து செய்யக்கூடிய தொழிலை செய்தால் உங்களால் சிறப்பாக தொழில் செய்ய முடியும்
உங்களுக்கு சந்திரனுடைய தசையோ புத்தியோ மற்றும் அந்தரம் வரும்பொழுது  எல்லாம் உங்களுடைய மனதில் மிகப்பெரிய குழப்பங்களும், நிலையற்ற தன்மையும் ஏற்படக்கூடும், கவனமாக இருக்க வேண்டும்.
மூன்றாம்  பாவகத்தில் சந்திரனுடைய தொடர்பு 3,12  வருவதால் உங்களுடைய பெயரில் எந்த ஒரு இடமும், நிலமும், வீடு வாங்கும் முயற்சியும் எடுக்க வேண்டாம் மற்றும் உங்களுடைய பெயரில் எந்த ஒரு தொழிலும் தொடங்கவும் வேண்டாம்.
இதுபோல தொடர்பு உள்ளவர்கள் அடிக்கடி வாடகை வீட்டையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தொழிலையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மற்றும் இவர்களுக்கு வாஸ்துபடி தவறான இடமே அமையும். 

தீர்வுகள்....
உங்களுடைய மனைவி, அல்லது 22 வயது கடந்த உங்களுடைய வாரிசுகளின் ஜாதகத்தை ஆய்வு செய்து அவர்களுக்கு நல்ல கொடுப்பினை இருக்குமானால் அவர்கள் பெயரில் ஒரு நல்ல வீட்டை வாங்க முயற்சி எடுங்கள்.
உங்களுடைய ஜாதகரீதியாக உங்களுக்கு ஒரு நிரந்தர வீடு அமைவது என்பது சற்று கடினமே.


வாஸ்து நிபுணர், kp ஜோதிடர்  
P.M.கிருஷ்ணராஜன்
+91 8220544911
நன்றி..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தம்பியை வாழ வைத்து... அண்ணனை வீழ்த்திய வீட்டின் அமைப்பு.

தெற்கு திசை பார்த்த வீட்டின் பலன்கள் south facing house benefits