இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  அவசர உலகில் சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா.? நீரிழிவு நோய்க்கும் குக்கர் சாதம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இப்படி சாதத்தை வடிப்பதில் தொடங்கி சாப்பிடுவது வரை பல விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவசர உலகில் உணவை சாப்பிடக்கூட அவசரம்தான். சமைப்பதில் கூட குறுக்குவழியா என்றால் அதற்கு குக்கர்களின் விசில் சத்தம்தான் சாட்சி. அப்படி குக்கரின் சமைத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய தீமைகளை பெறக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சம் உப்பு போட்டு சூடாகப் பருகினால் பித்தம் அகலும். சூட்டால் கண் எரிச்சல் இருந்தாலும் சரியாகும். அதுவே ஆறிப்போன கஞ்சியை குடித்தீர்கள் எனில் வாயுத்தொல்லையால் அவதிப்படுவீர்கள். சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பு நீங்கும்.  சிலருக்கு சாதம் சூடாக சாப்பிட்டால் பிடிக்கும். அதற்க்காக கொதிக்க கொதிக்க இருக்கும் சாதத்தை சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டில்தான் சாப்பிட வேண்டும். அதேபோல் சில்லென ஆறிப்போன சாதத்தை சாப்பிடுவதால் கீழ்வாதம், மூட்டுவாதம் போன்ற ப...