வாஸ்துபடி வீட்டின் தண்ணீர் தொட்டி அமைப்பு! நம்முடைய இடத்திற்கு அதாவது குடியிருக்கும் வீட்டிற்கு, காலிமனைக்கு, தொழிற்சாலைகளுக்கு, விவசாய நிலத்திற்கு எங்கு நீர் நிலைகள் வரவேண்டும். அதாவது தரைக்குக்கீழ் வரக்கூடிய தண்ணீர் தொட்டி, கிணறு போர் எங்கு வர வேண்டும். அதனால் நமக்கு என்ன நன்மை தீமைகள் பற்றி பார்ப்போம். தண்ணீர் தொட்டி வரவேண்டிய பகுதிகள் : நம்முடைய இடத்திற்கு எப்பொழுதுமே தரைக்குக்கீழ் வரக்கூடிய தண்ணீர் தொட்டி அமைப்பும், கிணறு அமைப்பும், போர் அமைப்பும் வடகிழக்கு பகுதியை சார்ந்தே வரவேண்டும். தண்ணீர் என்பது எப்பொழுதுமே தாழ்வான பகுதியை நோக்கி செல்லக்கூடியது. நமது இடத்திற்கு வடகிழக்கு எப்பொழுதுமே தாழ்வான பகுதியாக இருப்பது சிறப்பை தரும். தரைக்கு மேல்வரக்கூடிய தண்ணீர் தொட்டி எப்பொழுதுமே தென்மேற்கு பகுதியில் வீட்டின் கூரை பகுதிக்கு மேல் வருவது சிறப்பை தரக்கூடியது. தண்ணீர் தொட்டி வரக்கூடாத பகுதிகள் : நமது மொத்த இடத்திற்கு தரைக்குக்கீழ் தண்ணீர் தொட்டி வரக்கூடாத பகுதிகள் : 1. தென் கிழக்கு 2. தென் மேற்கு 3. வட மேற்கு 4. மேற்கு 5. தெற்கு. ...
இடுகைகள்
ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வாஸ்துப்படி தவறான சமையலறை அமைப்புகள் ஒரு கட்டிடத்தை கட்டிவிட்டு சிறிதுகாலம் நீங்கள் அந்த இடத்தில் குடியிருந்தால் மட்டுமே அந்த இடம் உங்களுக்கு நன்மையை செய்கிறதா அல்லது தீமையை செய்கிறதா என்பதை உங்களால் உணர முடியும். ஒரு வீட்டில் சமையலறையை எங்கு வைக்க வேண்டும். அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா இந்த மூன்று மாநிலத்தில் பெரும்பாலும் தென்கிழக்கில் சமையலறை இருக்கும். ஏன் மற்ற இடங்களில் சமையலறை வைக்காமல் தென்கிழக்கில் மட்டும் வைத்தார்கள் என்றால்? இந்த பூமி மீது கட்டக்கூடிய வீடுகளில் தென்கிழக்கை அக்னிக்கு உண்டான பகுதியாக நமது முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளார்கள். கால சக்கர தத்துவத்தின்படி அந்த இடம் இயற்கையாகவே அப்படி அமைந்துள்ளது. அதேபோல் தென்கிழக்கையும், வடமேற்கையும் பெண்களுக்கு உண்டான பகுதியாகவும் காலச்சக்கரத்தில் பிரித்து வைத்துள்ளார்கள். அதனால் என்னவோ சமையல் வேலையை அதிகமாக பெண்களே செய்கிறார்கள். பொதுவாக சமையலறை தென்கிழக்கு, வடமேற்கில் வரும்போது பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சொந்தவீடு எப்பொழுது அமையும் கேள்வி : ஐயா வணக்கம் என்னுடைய பெயர் வசந்த் 18-04-1981 காலை 10 - 30 மணிக்கு பிறந்தேன் எனக்கு இன்றுவரை சொந்த வீடு இல்லை, வாடகை வீட்டை அடிக்கடி மாற்றிக் கொள்கிறேன், அதே போல் என்னால் ஒரே இடத்திலிருந்து நிரந்தரமாக தொழில் செய்ய முடியவில்லை, எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள் ஐயா. பதில் : அன்பு நண்பரே தங்களின் மேலான கேள்விக்கு நன்றி… தங்களின் ஜாதகத்தை kp முறையில் ஆய்வு செய்ததில் உங்களுக்கு தற்சமயம் குரு திசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் பாவகத்தில் சந்திரனே அமர்ந்து 3,12 என்ற தொடர்பில் இருப்பதால் உங்களால் எந்த ஒரு பலனையும் நீண்ட காலத்திற்கு அனுபவிக்க முடியாது. பொதுவாகவே சந்திரனுடைய பலன் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது.அதனால் உங்களுடைய மனம், இருப்பிடம், தொழில் இவைகள் எதுவுமே நிரந்தரமாக உங்களால் ஒரு இடத்தில் உட்கார்ந்து அனுபவிக்க முடியாது. சந்திரனுடைய தொடர்புகள் இந்த மாதிரி வரும்பொழுது ஒரு இடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலைந்து திரிந்து செய்யக்கூடிய தொழிலை செய்தால் உங்களால் சிறப்பாக தொழில் செய்ய முடியு...